பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேனா, பற்பசை, தபால் பசை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

மாணவ - மணிகளே!

காலையில் தூங்கி எழுந்ததும் பல் துலக்கி விட்டுத்தானே நீங்கள் காஃபி குடிக்கின்றீர்கள்? அந்த பல் துலக்கும் பசைய்ைக் கண்டுபிடித்த விஞ்ஞானி யார் தெரியுமா?

இவர் பெயர் ஜான் கோஃபிராண்ட் என்பவர். பிரெஞ்சு நாட்டுக்காரர். பிளாஸ்டிக் வடிவம் போன்ற ஒரு டியூப்பை, அதாவது சிறு குழாய் வடிவத்தை உருவாக்கி, அதனுள் தான் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த பல் துலக்கப் பயன்படுத்தும் பசையை (Tooth Paste) அடைத்து வைத்து விற்பனைக்கு அனுப்பிப் பணம் உருவாக்கியவர்.

இதே விஞ்ஞான அறிவு படைத்த அந்த விந்தை மனிதர்தான் மக்களுக்குத் தினந்தோறும் பயன்படும் தலைமயிர் வளர்ச்சிக்குரிய பசை யையும் (Hair Cream) தயாரித்து, ஒரு சிறு கண்ணாடி பாட்டல் உருவத் தில் நிரப்பி வைத்துக் கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பினார்.

மக்களுக்குத் தினந்தோறும் பயன்படும் இந்த இரண்டு உபயோகப் பொருட்களை முதன் முதலாகத் தயாரித்ததோடு இராமல், மற்றும் சில பசைகளையும் அவர் உருவாக்கினார். அவை எலாம் புகழ் பெறவில்லை. இந்த விஞ்ஞானி கி.பி. 1801-ஆம் ஆண்டு முதல் 1873-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர்.

பிரிட்டிஷ் நாடுகள், தீவுகள் என்று சொல்லப்படும் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து என்ற மூன்று தீவுகளில் ஒன்றான ஸ்காட்லாந்து என்ற தீவின் நகர் ஒன்றில் புத்தக வியாபாரம் செய்துக் கொண்டிருந்தவர் ஜேம்ஸ் சார்ல்மெர்ஸ் (James Charlmers) என்பவர். அந்த நகரிலே இவர் புகழ்பெற்ற புத்கக வியாபாரி.

அஞ்சல் தலையின் பின்புறத்தில் அதை ஒட்டுவதறகாக ஒரு பசை இருக்குமே! அதையும் நீங்கள் கண்டு, ஒட்டிப் பார்த்திருப்பீர்களே! தாட்களில் ஒட்டிக் கொள்ளும் அந்த ஸ்டாம்புப் பசையை முதன் முதல்