பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

கண்டுபிடித்து வெளியிட்டவர் அதே ஜேம்ஸ் சார்ல்மெர்ஸ்தான் - மாணவ மணிகளே!

தற்போது பலர், பலவிதமான கை கடிகாரங்களைத் (Wrist watches) தங்களது மணிக்கட்டுகளில் கட்டிக் கொண்டு பணிகளுக்குப் போகிறார்கள் இல்லையா?

அந்தக் கடிகார வகைகளில் ஒன்று, மின்சார சக்தியால் ஓடும் கைக் கடிகாரம். அந்த அற்புதக் கடிகாரத்தை முதன் முதலாக 1969-ஆம் ஆண்டில் கண்டு பிடித்தவர் பெர்னார்டு கோலே (Bernard Golay) என்பவர். இவர் கைக் கடிகாரத் தயாரிப்புக்குரிய புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.

ஒருவன் திருடி விட்டால், கொலை போன்ற கொடிய செயல்களைச் செய்து விட்டால்; அவனைக் காவல்துறை பிடித்துச் சிறையில் பூட்டுகின்றது அல்லவா?

அவன்தான் கொலையைச் செய்தவனா என்பதைக் கண்டறிய, அடையாளம் காண, அவனுடைய கைரேகைகளைப் படம் எடுத்து வைத்துக் கொள்கின்றனர் காவல் துறையினர். அந்தக் கைரேகை அச்சுப் படத்தை உலகில் முதன் முதலாகக் கண்டுபிடித்தவர் சர் ஃபிரான்சிஸ் sirsol. Lshī (Sir Franceš Galton) 6TsuruguffTeumi.

கால்டன் இயற்கைப் பொருட்களை, அதன் பண்பாடுகளை ஆராய்ச்சிச் செய்துப் புகழ் பெற்ற விஞ்ஞானி சார்லஸ் டார்வின் என்று நீங்கள் விஞ்ஞானப் பாடங்களில் படித்திருப்பீர்கள். அந்த மேதை டார்வின் என்பவருக்கு கால்டன் மாமன் உறவுடையவராவார்.

ĝýTu$6îð 6Ti-561 suTi-Lň@uosiiT (Louis Edson Waterman) 6T6TD அமெரிக்க விஞ்ஞானி மையூற்றி எழுதும் சிறு குழல் உருளை வடிவத்தில் ஒரு பேனாவைத் தயாரித்து அதனுள் இங்க் போன்ற ஒரு வகை மையை ஊற்றி தாளில் எழுதிக் காட்டினார்.

இதுதான் அந்த விஞ்ஞானி அன்று முதன் முதலாக உலகுக்கு செய்துக் காட்டிய சாதனை. இந்தக் கண்டுபிடிப்பின் பயன்பாட்டு அருமையை உணர்ந்த மக்கள் அந்த பவுண்டன் பேனாவிற்கு அவர் பெயரையே வைத்து Waterman Pen என்று அழைத்தார்கள். 1884-ஆம் ஆண்டில் இந்த சாதனையைச் சாதித்தவர் அவர். அமெரிக்க கல்வி உலகம் அவரைப் பாராட்டிப் பெருமைப்பட்டது.