பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய நிதியமைச்சராக வந்தவரெல்லாம் தமிழரே!

மாணவ - மணிகளே!

இந்தியா 1947-ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பிறகு, அதன் முதல் நிதியமைச்சர் பதவியை ஏற்ற முதல் தமிழர் சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார்.

இவர் பிரதமர் நேரு அமைச்சரவையில் அந்தப் பதவியை வகித்தார். இவர் நீதிக் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அப் பதவியை ஏற்றார். காங்கிரஸ்காரர் அல்லர். கோவை தொழிலதிபர், பத்திரிகையாளர், பொருளாதார மேதையுமாவார்.

இரண்டாவது நிதியமைச்சராக இருந்த தமிழர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார். இவர் தொழிலதிபர். நேரு அமைச்சரவையில் நிதி மந்திரியாகப் பணியாற்றியவர். மூன்றாவதாக, ஆர். வெங்கட்ராமன். இவர் இந்திராகாந்தி அமைச்சர் அவையில் பணி புரிந்தார்.

நான்காவதாக நிதியமைச்சராகப் பதவி ஏற்றவர் சி. சுப்பிரமணியம் என்ற தமிழர். இவரும் இந்திரா காந்தி அமைச்சர் அவையில் இருந்தவர். ஐந்தாவதாக ப. சிதம்பரம் என்ற தமிழர் நிதியமைச்சர். இவர் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி பதவி வகித்தவர்.

ஆறாவதாக, ப. சிதம்பரம் என்ற அதே தமிழர்தான் மீண்டும் நிதியமைச்சர் ஆனார். இவர் மன்மோகன்சிங் அமைச்சர் அவையில் தற்போதைய நிதியமைச்சராக இருக்கிறார்.

இவற்றில் என்ன சிறப்பு என்றால், காங்கிரஸ் ஆட்சி ஏற்கும் போதெல்லாம் தமிழர்களே மத்திய நிதியமைச்சராக இருந்து வருவதுதான்.