பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 5

உருவான மோட்டார்கார். இந்த விசை வண்டி நான்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு நீராவி சக்தியால் ஓடியது.

இந்த நீராவி வண்டி 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடியதும். அது ஒவ்வொரு இருபது நிமிடத்திலும் ஒவ்வோர் இடத்தில் நின்று, நின்று, நீராவிச் சக்தியை மீண்டும் மீண்டும் நிரப்பிக் கொண்டே ஓடியது.

இங்கிலாந்து நாட்டில், நீராவியின் சக்தியால் தானாகவே இயங்கும் விசை வண்டி ஒன்று, 1801-ஆம் ஆண்டில் அறிமுகமானது. இதைக் கண்டு பிடித்தவர் ஆங்கிலப் பொறியாளர் ரிச்சர்டு திரிவேதிக் என்பவர். இந்த வண்டியும் நீராவி சக்தியால் இயங்கும் முறையிலேதான் அறிமுகமானது.

இந்த வண்டி கோரன்வால் என்ற இடத்திலிருந்து இலண்டன் வரையுள்ள 160 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடும் சக்தி பெற்றதாக இருந்தது.

இதே நீராவி விசை வண்டியை ரயில் வண்டி ஒடும் இருப்புப் பாதையிலும் திரிவேதிக் ஒட்டிக் காட்டினார். அதனால் அவர்; சாலைகளிலும் - இருப்புப் பாதைகளிலும் நீராவி வண்டியை ஒட்டும் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

இதற்கிடையில், ஐரோப்பா கண்டத்திலும், அமெரிக்கக் கண்டத்திலும் புதுப்புது வகையில் நீராவி விசைகளால் ஒடும் வண்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டே வந்தன.

ஆலிவர் ஈவான்ஸ் என்ற அமெரிக்க எஞ்சினியர், 1790-ஆம் ஆண்டில், அதிகமான நீராவிச் சக்தியின் பலத்தால் ஓடும் விசை வண்டி ஒன்றுக்கு : காப்புரிமை பெற்றார். பிறகு, சிகாகோ நகரில் 1804-ஆம் ஆண்டில் நீராவிச் சக்தியால் ஓடும் வண்டியை அவர் சொந்தமாகத் தயாரித்தார்.

வால்டர் ஹான் காக் என்ற ஆங்கிலேயர், நீராவியால் ஒடும் பெட்டி வடிவமான வண்டிகளை முதன்முதலாக 1830-ஆம் ஆண்டில் கண்டுபிடித்து இலண்டன் நகரில் ஒட்டிக் காட்டினார். இதுதான் முதல் ஓமினி பேருந்து. இதுபோலவே, பல கண்டுபிடிப்பாளர்கள் ஆங்காங்கே புதுப்புது நீராவி எஞ்சின்களைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டியதோடு மட்டுமல்லாமல், அவற்றைப் பெட்ரோல் எண்ணெய் சக்தியாலும், வேறு எரிசக்திகளாலும், எஞ்சினுள் சிலிண்டர் முறைகளாலும் ஒட்டுவதற்கு வழி கண்டுபிடித்தனர். தன்னிடத்திலேயே எழும் வெப்பத்தினால் தீப்பற்றிக் கொள்ளும் உள்ளெரி எஞ்சின்கள் என்று இந்த வண்டிகள் குறிப்பிடப்பட்டன.