பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூற்றைம்பது மொழிகளில் கொலம்பஸ் கடிதம்!

கொலம்பஸ்

மாணவர்களே, மாணவிகளே!

ள்ேளிப் படிப்பை முடித்து நீங்கள் வெளியே வந்து, எந்தெந்த துறையில் தோன்றுகின்றீர்களோ, அந்தந்தத் துறைகளில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் மீது எழுதும் எழுத்து என்றும் அழியக் கூடாது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

ஐ.ஏ.எஸ். பட்டத்தைப் பெறுபவர்களுக்குக் கூறப்படும் முதல் விதி என்ன தெரியுமா? “அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து பேனா முனையை வைக்காதே! அப்படி வைத்தப் பின்பு அந்த முடிவை மாற்றிக் கொள்ளாதே’ என்பதுதான்.

ஒருமுறை, அதாவது 1492-ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற இத்தாலி நாட்டுப் புவியியல் கண்டுபிடிப்பாளர், கடல் பயணம் செய்து பூமியின் ஒரு பகுதியைக் கண்டுபிடித்தார்.

அந்த நிலம்தான் இந்தியா என்று அவர் தவறாக நம்பினார். ஆனால், அது அமெரிக்கப் பூமி என்பதைப் பிறகுதான் உணர்ந்தார். அப்போது அந்தக் கண்டுபிடிப்பை விளக்கி, ஸ்பெயின் நாட்டு அரண்மனையிலே உள்ள தனது நண்பருக்கு கொலம்பஸ் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதம் இன்று உலக நாடுகளில் உள்ள 150 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது என்றால், அந்த எழுத்துக்களின் உணர்ச்சி, வலிமை எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்று மாணவர்களே நீங்கள் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

கொலம்பஸ் 1492-ஆம் ஆண்டில் எழுதிய அந்த அஞ்சல், இன்று அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் பொது நூலகத்தில் வைக்கப்பட்டுக் காட்சியளிக்கின்றது. அமெரிக்கா செல்லும் வாய்ப்பு இன்று படிக்கும் மாணவர்களுக்கு நாளை வருமானால் சென்று பாருங்கள். அந்த உலகம் போற்றும் அற்புதக் கடிதத்தின் மாண்பை.