பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 64 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் மருந்துக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒழுக்க நெறிமுறைகளை மருத்துவக் கலையில் உருவாக்கினார்.

இதற்கு ஹிப்போக்ரெட்டஸ் மருத்துவ முறை என்று பெயரிட்டார். மருத்துவம் படிப்போர்க்கு எல்லாக் காலங்களிலும் கடமை - ஒழுக்க முறைகள் ஆகியவற்றை அவர் ஏற்படுத்தினார்.

ஹிப்போக்ரெட்டஸ் தனது மாணவர்களுக்கு 72 வகையான மருத்துவ முறைகளைப் போதித்து, அதற்கு ஹிப்போக்ரெட்டஸ் தொகுப்பு முறைகள் என்றும் பெயரிட்டார்.

அத்தகைய கிரேக்க மருத்துவ மேதையை அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல; மருத்துவ உலகமே அவரை மருத்துவத் துறை தந்தை என்று அழைத்தது; பாராட்டியது.

ஹிப்போக்ரெட்டஸ் மருத்துவம்; மக்கள் நோய்களைக் குணப்படுத்தும் இயற்கை சார்ந்த மருந்துகள் என்பதை அறிந்த மக்கள், அவருக்கு நன்றி காட்டு வகையில் கிரேக்க நாடு 7.7.1996-ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியீட்டு விழா எடுத்தது. அந்த தபால் தலையைத்தான் மேலே உள்ள படத்தில் பார்க்கிறீர்கள்.

ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மருத்துவத் தந்தையை மறவாமல்; கிரேக்க நாடு காட்டிய நன்றி, ஹிப்போக்ரெட்டசுக்கு மட்டுமன்று. உலக மருத்துவத் துறைக்கே காட்டிய நன்றியுணர்ச்சி விழாவாக அது விளங்கியது.

வருங்காலத்தில் மருத்துவராகப் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு; ஹிப்போக்ரெட்டஸ் மருத்துவக் கலைத்துறைத் திறமைகள் அவர்கள் பின்பற்றிட நன்கு பயன்படலாம்!