பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 467

டாக்டர் அமார்த்திய குமார் சென், இவர் ஒரு பொருளாதார மேதை. அந்தத் துறையில் அவர் புதிதாகக் கண்டுபிடித்த பொருளாதார நுட்ப வளர்ச்சித் திட்டங்களுக்காக 1998-ஆம் ஆண்டில் நோபல் பரிசு Quញុំទាវអំ.

எனவே, இதுவரை இந்தியர்கள் ஆறுபேர், ஆறு துறைகளில் அவரவர் புதிய சாதனைகளைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவியல் கொடைகளாக வழங்கியுள்ளார்கள் என்ற விவரம்தான் நீங்கள் மேலே படித்தது.

நோபல் பரிசு பெற்றவர்களில் இரண்டு பேர் தமிழர்கள் என்பதுதான் நமது பெருமைக்குரிய சம்பவமாகும்.

மேலும் கியூரி அம்மையாரும், அவருடைய குடும்பத்தினரும் நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால், அணு சக்தியை ஆய்வு செய்து ரேடியம் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றதைவிட, மக்கள் உள்ளங்களிலே இடம் பிடிக்கும் அளவுக்கு வறுமை நெருப்பை அணைக்கவும், பிணியாளர்களது வலியை நீக்க அரும்பாடுபட்ட பண்புகளுக்கு கிடைத்த அன்புப் பரிசுதான் உயர்ந்தது; உன்னதமானது, உலகம் போற்றக்கூடிய பொது நல வளத்தை வழங்கக் கூடியது என்பதால் அன்னை தெரசா, அமைதிக்காக நேபால் பரிசு பெற்றார்! அன்பு, இரக்கம், கருனை, பாசம், பண்பு, அருளாட்சி என்ற மனித நேயத் தத்துவங்களுக்குக் கிடைத்த பரிசாக உலகம் இன்றும் அதை மதிக்கின்றது.

நோபல் பரிசு இந்தியர்கள் அறுவருள் இருவர் தமிழர்!

i

t

டாக்டர். அமர்த்திய