பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 171

மது போதை ஏறிய நேரத்தில் அந்தச் சுவை பிரபுவுக்கு மிகமிக ருசியாக காரசாரமாக இருந்தக் களிப்பால், அங்கு ஆடிக் கொண்டிருந்த அத்தனைச் சீட்டாட்ட மேசையில் உள்ளவர்களுக்கும்-தான் தின்னதையே அவர்களுக்கும் தின்னக் கொடுக்குமாறு அந்தப் பிரபு உத்தரவிட்டார்.

பிரபுவின் உத்தரவுக்கேற்றபடி, எல்லா மேசைகளிலும் இருந்த ஆட்டக்காரர்கள் தங்களுக்கு ஏறிய குடி போதையோடு; அந்த ரொட்டித் துண்டுகளைச் சுவைத்துச் சுவைத்து உண்டு மகிழ்ந்துக் கூத்தாடினர்.

அவர்களில் ஒருவர் கிளப் பொறுப்பாளரிடம் சென்று, உணவு வழங்கிய பிரபுவின் பெயர் என்னவென்று கேட்டுக் கொண்டே பிரபு அருகே ஓடி வந்து, சாண்ட் விச் வாழ்க" என்ற தனது குரலை உயர்த்திக் கூவிக் கொண்டாடினார்.

அன்று முதல் பிரபு வழங்கிய அந்த உணவு நல்ல சுவையான தின்பண்டப் பொருளாக இருந்ததால், சாண்ட்விச் உணவு கொண்டு வா’ என்ற ஆர்டர் ஓட்டலுக்குள் அதிகமாகக் குவிந்தது. சாண்ட் விச் என்ற அந்தப் பெயரே அரங்கு முழுவதும் பரவி நிலைத்துவிட்டது. தினந்தோறும் அந்தக் கிளப்பிற்கு வரும் மக்களிடமும் அது புகழ் பெற்றுவிட்டது.

அதனால் இன்றும் நாகரிக உணவு விடுதிக்குச் சென்று சாண்ட் விச் கொண்டு வா என்று ஆர்டர் கொடுத்தால், இரண்டு ரொட்டி சிலேஸ்களுடன், யார் யாருக்கு எதெது விருப்பமோ அதனைத் தொட்டுக் கொண்டுத் தின்றிட, அதைக் கொண்டு வந்துக் கொடுப்பார்கள்!

எது வேண்டுமோ அத்துடன் இரண்டு ரொட்டி சிலேசுகளை அதாவது ஒருவித மசாலாவுடன் நொறு நொறு வென்று மென்றுச் சுவைக்கும் உணவுப் பொருளுக்கு அன்றுமுதல் சாண்ட் விச் என்றே பெயராகி விட்டது; பொருளுமாகி விட்டது.

படத்தில் இருப்பவர்தான் அந்த 'சாண்ட்விச் என்ற ஆங்கிலேயர் பிரபு அவர் பெயர்தான் சாண்ட் விச் அவர் பெயர்தான் அந்த நொறுக்குத் தீனியைக் கண்டுபிடித்தது.

இன்று புகழ் பெற்ற பெரும் நகரங்களிலே இருக்கும் பெரிய படாடோப உணவு விடுதிகள் எல்லாமே, சாண்ட் விச் என்ற உணவைப் புதுப்புதுச் சுவையுடன் வழங்குகிறார்கள். ஆனால், சாண்ட்விச் என்ற பெயரை மட்டும் எந்த நாட்டிலும் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க நன்றியுணர்ச்சியாக இன்றும் நடமாடுவதைப் பார்க்கின்றோம்.