பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 173

உடலுக்கு நோய்கள் எதுவும் வராத ஒரு பாதுகாப்பு அவர்களுக்குள்ளேயே உருவாவதை நம்மால் காண முடியும் என்பதே, மாண்டிசோரி கல்வி மழலையர் ஊக்கக் கல்வி முறையின் நோக்கம் என்பதை அறிந்த அந்த அம்மையார் - வாட்டிகன் நகரத்திலேயே ஒரு மாண்டிச்சோரி பள்ளியை உருவாக்கி நடத்தியும் காட்டினார்.

மாண்டிச்சோரி கல்வி முறை, சிறுக சிறுகச் உலக முழுவதும் பரவியதால், இந்தியாவிலும் அந்தக் கல்விப் பள்ளி உருவாயின! மழலையர் உலகம் தமிழ்நாட்டிலும் மாண்டிசோரி கல்வியால் பயன் பெறுகிறது.

தற்போது அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் சிறுவர் - சிறுமியர்களுக்கும், நாட்டியம், ஆடல், பாடல், இசை, நாடகம், பட்டிமன்றம், பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதற்கான பயிற்சிகள், பெண் ஆசிரியைகளுக்குப் பயிற்சி வழங்கப்படுவதாகத் தெரிகின்றது. எவ்வளவு தூரம் அவை மாண்டிசோரிக் கல்விக்கு உறுதுணையாக அமையுமோ!

தனியார் பள்ளிகளில் மேற்கண்ட பயிற்சி முறைகள் வெற்றி பெறலாம்! காரணம், தனியார் பள்ளிகளில் மழலையர், சிறுமியர், சிறுவர்களுக்குச் சுதந்திரமாக ஆடப் பாட வசதி உள்ளது.

அரசுப் பள்ளிகள் அவ்வாறான பண்புடையவை அல்ல. எது எவ்வாறானாலும் சரி, குழந்தைகளது விருப்பம் போலக் கல்வி கற்பிக்க அரசு வசதி செய்தாலே போதுமானாது.