பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரான்ஸ் நாட்டில் யார் மேதை? தேர்தலில் லூயி பாஸ்டியர் வெற்றி!

லுயி பாஸ்டியர்

மாணவ - மணிகளே!

டேத்தில் காட்சி தருபவர்தான் லூயி பாஸ்டியர் எனப் புகழ் பெற்ற விஞ்ஞானி. இவர் 1822-ஆம் ஆண்டில் ஃபிரான்ஸ் நாட்டின் ஜூரோ என்ற மாநிலத்தில் டோல் என்னும் சிற்றுாரில் பிறந்தவர். இவர் தந்தை ஜோசப் பாஸ்டியர், ஓர் ஏழைத் தோல் பதனிடும் தொழிலாளி.

மாவீரர் நெப்போலியன் போனபார்ட் படைத் தளபதிகளிலே ஒருவராகப் பணியாற்றிய வைர நெஞ்சர். தாயார் பெயர் ஜூன் எடினட் ரோக் யீ என்பவர்.

அத்தகைய ஒரு மருத்துவ மேதையின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிலே சிலவற்றை மாணவர்களாகிய நீங்கள் தெரிந்து கொண்டால், 'உங்களுடைய ஆக்கத்திற்குரிய ஊக்கத்திற்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும் அல்லவா?

மருத்துவ மேதை லூயி பாஸ்டியர், அவர் தோன்றிய துறைகளிலே எல்லாம் உலகப் புகழ் பெற்று, 1892-ஆம் ஆண்டில் பிறந்த ஊரிலேயே மறைந்தார். அவர் மாணவர்களுக்கு கூறிய அறிவுரைகள் இவை :

இளைஞர்களே! எதிர்கால டாக்டர்களே!

எதற்கும் பயம் கொள்ளாதீர்! எந்த ஒரு செயலையும் துணிவாகச் செய்திடும் மன உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்றுவரை மனித குலத்துக்காக என்ன சாதனை செய்திருக்கிறீர்கள்? என்பதைத் தினந்தோறும் சிந்தனை செய்து பாருங்கள். நீங்களும் ஒரு லூயி பாஸ்டியராவீர்கள். அதனால், மனித குலம் முன்னேறும்.

எதிர்காலத்தில் உங்களது மனம் திருப்தி அடையும்; என்றெல்லாம் அறிவியல் துறையின் ப்யிற்சி டாக்டர்களுக்கெல்லாம் அடிக்கடி அறிவுரை வழங்கிக் கொண்டு வருகிறேன். அதைப் பின்பற்றுங்கள்' என்றார்.