பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி + 7.5

மாவீரன் நெப்போலியன் பிரான்சு நாட்டின் பெயரைத் தன் வீர வரலாற்றால் புகழடையச் செய்தார்.

அவருக்குப் பிறகு லூயி பாஸ்டியர் தனது மருத்துவக் கண்டுபிடிப்புகளால் ஃபிரான்ஸ் நாட்டின் பழம் பெருமைகளுக் கெல்லாம் பெருமை சேர்த்தார்.

ஃபிரான்ஸ் நாட்டில் லூயி பாஸ்டர் காலம் வரை, அதன் முன்னேற்றத்தில், அதன் வளர்ச்சியில், அரசியல், பொருளாதாரம், சமுதாய மறுமலர்ச்சி, ராஜ தந்திரம், பேரரசு நிறுவல் - மதத்தொண்டுகள், மனித உரிமைச் சீர்த்திருத்தங்கள், வீரச் செயல்கள், கலைத் துறை வளர்ச்சிகள், அறிவியல் துறைகளில் எண்ணற்றோர் தோன்றி அவரவர் உழைப்புகளை, சிந்தனைகளைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.

ஃபிரான்ஸ் நாட்டின் அந்த மாமேதைகளில் எல்லாம், 'யார், யார் மிகச் சிறந்தவர்கள்" என்று அந்த நாட்டு மக்களிடம் அந்த அரசு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு வாக்கெடுப்பு, அந்த நாட்டின் மக்களிடம் அன்று வரை நடைபெற்றதில்லை.

"லூயி பாஸ்டியர் ஒருவர்தான், ஃபிரான்ஸ் நாட்டிலேயே மிகச் சிறந்தவர் என்று மக்கள் தங்களது வாக்கெடுப்புகள் மூலம் அறிவித்திருக்கிறார்கள் என்றால் என்ன பொருள் இதற்கு? அவரது செயற்கரிய சான்றாண்மைச் செயல்கள் அல்லவா?

அப்படி என்ன சாதனைகளை அவர் அந்த நாட்டின் சார்பாக உலகுக்குச் செய்திருக்கிறார் என்பதை மாணவர்களே ஆழ்ந்து நோக்குங்கள். அவை இவை :

  • லூயி பாஸ்டியர் நோய் எதிர்ப்புப் போரை நெப்போலியனைப் போல நடத்தி, தியாகங்களைச் செய்திருக்கிறார்.
  • பிரெஞ்சு அரசுக்குப் பட்டுத் துணித் தொழில் மூலமாக வந்த பண வருமானம் நலிந்தது. அதற்குக் காரணம், பட்டுப்பூச்சிகளுக்கு வரும் நோய் என்பதைக் கண்டறிந்தார்.
  • நோயுள்ள பூச்சிகளிடம் இருக்கும் நோய்க் கிருமிகள், நோயில்லாத பூச்சிகளுக்கும் நோயைப் பரப்புகின்றன. நோய் தொற்று கின்றது. இதைத் தடுக்க வேண்டுமானால், நோயில்லாமல் இருக்கின்ற பூச்சிகளை, நோயுள்ளவைகளிடமிருந்து பிரித்து வைக்க வேண்டும். இதுதான் லூயி பாஸ்டர் உலகிலேயே முதன் முதல் கண்ட சாதனை.