பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 78 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் வேறோர் இடத்துக்கு அந்தக் கிருமிகள் பரவாமலும் தடுக்கப்பட்டன. காயமும் ஆறிவிட்டது. இதற்கு லூயி பாஸ்டியர் சிகிச்சை முறை என்று பெயர் வைத்தது மருத்துவ உலகம்.

வெறி நாய் கடித்தால் கடிப்பட்டவன் தொப்பூழைச் சுற்றி 14 ஊசிகள் போடும் முறை இன்றும் உண்டு. அல்லது பழுக்கக் காய்ச்சிய இரும்பால் கடிப்பட்ட இடத்தைச் சுடுவார்கள்.

இந்தக் கரடுமுரடான நாய்க்கடி சிகிச்சை முறையை பாஸ்டியர் வெறுத்தார். புதிய மருத்துவ முறையை விஞ்ஞான ரீதியாகக் கண்டுபிடித்தார். என்ன அந்த முறை?

கடித்த வெறிநாயின் மூளையையே எடுத்துத் திரவமாக்கினார். அதை ஊசி மூலம் கடிப்பட்டவன் உடலில் செலுத்தினார். அதன் முடிவு என்ன தெரியுமா?.

நல்ல நாயை வெறி நாயாக்கினார்; வெறிநாயை நல்ல நாயாக்கினார். இதே வெறி நாய் மூளை திரவத்தை மனிதனுக்கும் பயன்படுத்திப் பார்த்தார் வெற்றி! வெற்றி!

வெறிநாய் கடிக்குரிய மனிதனுக்கு புது மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாக உலகம் லூயி பாஸ்டியரைப் போற்றிப் பாராட்டியது.

மாணவ - மணிகளே! இத்தகைய ஓர் அரிய மாமேதைதான் ஃபிரான்ஸ் நாட்டின் மிகச் சிறந்த மேதையர் குலத் திலகம் என்று அந்த நாட்டு மக்கள் வாக்கெடுப்புகள் மூலம் தேர்ந்தெடுத்தார்கள்,

உலகம் புகழாரத்தைச் சூட்டி லூயி பாஸ்டியரைப் பெருமைப்

படுத்தி மகிழ்ந்தது முடிந்தால் மறுமுறையும் பாஸ்டியர் சுருக்கக் குறிப்பைப் படியுங்கள்.