பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 80 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

மாணவ - மணிகளே! மேற்கண்ட நையாண்டிக்காரர்களின் குத்தல், குடைச்சல் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்ட பிறகுதான், 1817, 1818-ஆம் ஆண்டுகளில் குளோரின், கார்பன் ஆகியவற்றை ஆய்ந்து இரண்டு புதிய கூட்டுப் பொருள்களைக் கண்டு அரசினர் கழகத்திற்குக் கூறினார் ஃபாரடே, அவை இரண்டும் வேதியியலில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் என்று இராயல் இன்ஸ்டிடியூஷன் அறிவித்தது.

ஃபாரடே அவற்றைத் தொடர்ந்து சோதனைகள் நடத்தி, அவற்றால் 'வெள்ளி எஃகு என்ற ஒன்றை, அன்றுவரைக் கண்டுபிடிக்கப்படாத ஒரு புதிய உலோகத்தை அவர் கண்டுபிடித்தார்.

அந்த உலோகத்திற்கு இன்றைய பெயர் என்ன தெரியுமா மாணவர் செல்வங்களே! எவர்சில்வர் (Eversilver நினைவில் நிறுத்துங்கள். இதுதான் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என்ற உலோகம் ஆகும்.

இந்த எவர்சில்வர் உலோகத்தைத்தான் ஃபாரடே வெள்ளி எஃகு அதாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என்றாரென்று இராபர்ட் ஹாடுஃபீல்டு என்பவர் ஆய்ந்து உறுதிப்படுத்தினார்.

அதனால், மைக்கேல் ஃபாரடே கண்டுபிடித்த எவர்சில்வர் பொருட்கள் இன்று ஏழை மக்கள் வீடுகளிலும் குடியேறிவிட்டமையால், ஃபாரடேயை எல்ர்சில்வர் எனப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலின் தந்தை என்று மக்கள் அவரை அழைக்கின்றார்கள்.

மாணவ மணிகளே! அவள் வாழ்ந்திருந்தபோது ஹான்ஸ் கிறிஸ்டியன் எர்ஸ்ட்டெட் என்ற டென்மார்க் நாட்டவர், மின்சாரம் மூலமாகக் காந்தத்தை உருவாக்கும் முறையைக் கண்டுணர்ந்து புகழ் பெற்றிருந்தார்.

மின்சாரம் காந்தத்தை உருவாக்குமானால், ஏன், காந்தத்தை மின்சாரமாக்க முடியாது என்ற வினா எழுந்தது. அதனால் ஃபாரடே 'அன்னல்ஸ் ஆஃப் ஃபிலாசஃபி என்ற பத்திரிகையில் மின் - காந்தம் என்ற கட்டுரையை எழுதினார். அதை அவர் செய்முறையாக எழுதும்போது :

குழிவான பள்ளமுடைய சிறிய பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு கட்டைக் காந்தம் ஒன்றன் ஒரு முனையில் மெழுகைத் தட்வி, அதைச் சிறிய பாத்திரம் நடுவில் செங்குத்தாக நிற்கும்படி செய்யுங்கள். பிறகு, ஏறத்தாழ பாத்திரம் விளிம்புவரை பாதரசத்தை ஊற்றி நிரப்புங்கள். அதே நேரத்தில் கட்டைக் காந்தத்தின் மேல்முனை பாதரசத்திற்கு கொஞ்சம் மேலே நீட்டிக் கொண்டிருக்குமாறு