பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானி காரிசனின் மறுதோன்றி நகல்

விஞ்ஞான முறையில் செராக்ஸ் நகல்கள் எடுக்கும் இயந்திர முறை தற்போது புகழ் பெற்றுவிட்டது. இதனால் நேரம், பணச் செலவு, அலைச்சல்கள் அதிகமாவது இல்லை.

இதற்கான கருவி முதன் முதலாக 1938-ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. அப்போது அதற்குப் பெயர் எலக்ட்ரோ போட்டோ கிராஃபி. நாளடைவில் இது செரோகிராஃபி என்று மாறிவிட்டது.

Xerography என்றால் மின் துகள் நிழற்பட முறை என்று பெயர். அதாவது - வேதி மாற்றம் ஏதுமில்லாமல், மின்னூட்டப்பட்ட தூசி துகள்கள் மூலம் நிழற்படம் ஆக்கப்படும் முறை என்று பெயர்.

செரோகிராஃபி (Xerography) என்ற பெயர், இரண்டு கிரேக்க மொழிச் சொற்களால் உருவானது. xerox என்ற சொல்லுக்கு உலர்ந்த என்றும் Graphen என்றால் எழுதுவதற்கு' என்றும், அதாவது “எழுதுவதற்கு ஒரு உலர்ந்த வழி” என்பது முழுப் பொருளாகும்.

போட்டோ படங்களையும், கையால் எழுதப்பட்டவைகளையும், தட்டச்சு செய்யப்பட்டவைகளையும் அவை எதுவாயிருந்தாலும் சரி அவற்றை நகல் எடுத்திட செரோகிராபி ஒன்றுதான் சிறந்த வழி.

Qssio is osmin småsen (Chester Floyd Carison) sists) அமெரிக்கர், 1938-ஆம் ஆண்டில் இதைக் கண்டுபிடித்தார். அவர் ஓர் இயற்பியல் நிபுணர், சட்டத்துறை வழக்குரைஞர்.

மாணவர்களே!

இவர் செராக்ஸ் நகல் எடுக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த சம்பவமே ஒரு விசித்திரமானது. அதைக் கேளுங்களேன் :

காரிசன் ஒரு மின்சாரக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சில எழுத்துப் படிவங்களையும்