பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி $ 85

காரிசன் முயற்சியில் தோல்வி அடையவில்லை. ஒஹியோ என்ற பகுதியில் இருக்கும் ஒரு விஞ்ஞான ஆய்வுக்கூடம் அவருக்கு உதவி செய்வதாக முன்வந்தது.

இரண்டாவதாக, வேறோர் நிறுவனம் செராக்ஸ் மெஷினைச் செம்மைப்படுத்தும் மின்னூட்ட அளவு முறைகளைச் சரிசெய்தாலே போதும் என்பதை அறிந்து; காரிசனுக்கு உதவி புரிவதாக வாக்களித்தது.

அந்த இரு நிறுவனங்களும் காரிசனுடன் சேர்ந்து, செராக்ஸ் இயந்திரத்தைச் சீர்படுத்தி, இன்றைய புகழ் நிலைக்குரிய தகுதிகளோடு விற்பனைப் பொருளாக அது உலகை வலம் வந்து கொண்டிருப்பதை நாமும் பார்க்கிறோம் அல்லவா?

மாணவ மணிகளே இதுதான் செராக்ஸ் என்ற மறுதோன்றி நகல் இயந்திரத்தின் கதை:

இன்றைக்கு கலர் செராக்ஸ் மெஷினும் வந்துவிட்டது. எத்தனைக் கலர்கள் வேண்டுமானாலும் எடுக்கும் அளவிற்கு செராக்ஸ் மெஷின் வணிகமும் வளமோங்கி வருகின்றதை நாம் கண்டு மகிழ்கின்றோம்.

செஸ்டர் ஃப்ளாயிட் காரிசன், தான் ஒரு வழக்குரைஞர், பட்டதாரி என்ற அவரது தகுதியைப் பாராமல், அமெரிக்க நியூயார்க் நகர் வீதிகளிலுள்ள நிறுவனங்களது படிக்கட்டுகளை ஏறி ஏறி இறங்கி அலைந்ததால்தான், அவரது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு இன்று உலகையே வலம் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். அவருடைய உழைப்பை, அறிவை இன்று நாமும் அனுபவிக்கின்றோம்!

மாணவ-மணிகளே, நீங்களும் இவ்வாறு சிறுசிறு விஞ்ஞான விளைவுகளைக் கண்டுபிடிக்கக் கூடாதா? சற்று சிந்தனை செய்யுங்கள் செல்வங்களே!