பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் 1907-ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில், ஃபோர்டு மோட்டார் நிறுவனம் R மாடல், 'S' மாடல், 'T' மாடல் என்ற இங்கிலீஷ் எழுத்துக்கள் பெயரால் கார்களை விற்பனைக்குத் தயாரித்தது.

பொது மக்கள் பயன்பாடுகளுக்காக, இந்தக் கார் தக்க வசதிகளோடு உருவானது. 1927-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 15 லட்சம் மாடல் கார்கள் தயாரிக்கப்பட்டன - விற்பனைக்காக!

மின்சார ஆற்றலால் ஓடும் கார் 1800-ஆம் ஆண்டில் தயாரானது. அந்தக் கார் ஒசையில்லாமலும், மாசுக் கட்டுப்பாடுகள் ஏதும் ஏற்படாமலும், சாதாரணமான சராசரி வேகத்தோடும், ஒடும் ஓட்டத்தோடு அமைந்திருந்ததால் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுவிட்டது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு நீராவி எஞ்சின்கள் நிலக்கரி சக்தி வலிமையுடனும், மின்சார ஆற்றலுடனும் தயாரான ஓடும் கார்கள் மக்கள் புழக்கத்திற்குப் பயன்பட்டன. இந்தக் கார் வகைகள் 1930-ஆம் ஆண்டு வரையிலும் ஓடின.

பிறகு அதே கார்கள் பெட்ரோல் எண்ணெய் சக்தியால் இயங்கின. பெட்ரோல் சக்தியால் ஓடும் கார்கள் மிக அதிக வேகத்தோடும், அதிக தூரம் ஓடுமளவும், அடிக்கடிப் பயன்படும் வகையிலும் இயங்கின.

இவை போக, 1906-ஆம் ஆண்டில் சில புதிய வகை மாடல் கார்கள்; அதாவது - முன்னால் அமைக்கப்பட்ட எஞ்சின்கள் மூடப்பட்டுள்ள மடிப்பு முகடுகளோடும், சுண்ணக் கரி வகையும் நீரும் சேர்வதால் உண்டாகும் ஒளியுடைய காற்று அல்லது மண்ணெண்ணெய் விளக்கு முன்னால் பொருத்தப்பட்ட முகப்பு விளக்குகளோடும், ஒட்டும் வேகம் காட்டும் அறிவிப்புப் பலகையும் இணைந்த கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1930-ஆம் ஆண்டுக்கும், 1937-ஆம் ஆண்டுகளுக்கும் மத்தியில் நீண்ட உருவத்தோடும், ஆடம்பர சுகபோக வசதிகளோடும் அமைந்த கார்கள் தயாராகி வந்துக் கொண்டிருந்தன. 1936-ஆம் ஆண்டில் மெர்சிடிஸ் என்ற ஒரு புதிய கார், டீசல் எண்ணெய் சக்தியோடு ஒடும் கார் முதன் முதலாக உலகத்தில் அறிமுகமானது.

வோல்க்ஸ் வாகென் பீட்லி என்ற ஜெர்மன் நாட்டுக் கார் ஒன்று 1949-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மிகவேகமாக ஒடும் கார் என்ற புகழைப் பெற்றிருந்தது.

இந்தக் கார் குறுகிய அளவு தோற்றத்தோடும், குளிர் சாதன வசதியோடும், அறிமுகமான கார் ஆகும். குளுகுளு வசதியும்; விசையாலான பிரேக் அமைப்பும், தானாகவே இயங்கும் விசைச் சக்தி,