பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோசப் லிஸ்டரின் ஆண்டிசெப்டிக் சர்ஜரி!

மாணவ - மணிகளே!

உங்களிலே சைவரும் இருப்பீர்கள் அசைவரும் படிப்பீர்கள்! அசைவராக இருந்தால் புலால் விற்கும் கடைகளுக்குப் போகும் போதெல்லாம் ஆடு, கோழி, மீன் போன்ற உயிர்களைத் துள்ளத் துடிக்க கொடுவாளால், வெட்டுக் கத்தியால் அவற்றின் உடலை வெட்டி வெட்டிக் கொத்திக் கொத்தி ரத்தம் சொட்டச் சொட்ட மக்கள் உண்ணும் இறைச்சியாக விற்பதையும், அன்பாக வளர்க்கும் வீட்டுப் பிராணிகளைத் தோலுரித்துத் தலைகீழாகத் தொங்க விட்டிருப்பதையும் பார்த்து மனம் துடிதுடித்துப் பதறி மரத்துப் போயிருப்பீர்கள்

சை மாணவ, மாணவிகளாக இருந்தால் காய்கறி வகைகளை அரிவதை மட்டுமே கண்டிருப்பீர்கள்! அதனால் உங்களுக்கு மன உலைச்சல் ஏற்பட வாய்ப்பில்லை!

இரண்டு வகை உணவுப் பொருட்களிலும் அததில் உயிர் இருந்தாலும், இறைச்சி விற்பவனிடம் நடக்கும் உயிரீனும் கொடுமைகளை நம்மால் காணவே சகிக்காது. ஏனென்றால், முள் தைத்த ஆட்டுக் குட்டியையே தோளில் சுமந்து சென்ற சித்தார்த்தன் பிறந்த நாடு நமது நாடு வாடியப் பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான் வருந்தி வாழ்ந்த நாடு இது அதனால், மனிதநேயத்தோடு எந்த உயிரையும் மதித்துப் போற்றும் பண்பாடு தமிழருக்கு இன்றும் உண்டு. காரணம், எத்தகைய எலும்பு முறிவுகளையும் மீண்டும் ஒட்ட வைக்க, பச்சிலை மூலிகைகளே போதுமானது. எந்தவித அறுவைகளும் சித்த முறைக்குத் தேவைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால், இங்கிலாந்திலும், மற்ற உலக நாடுகளிலும் 1837-ஆம்

ஆண்டுக்கு முன்பிருந்த மருத்துவமனை நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் எப்படி நடந்தன தெரியுமா? மாணவ - மணிகளே! இதோ