பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 494

மருத்துவமனைகளிலும், மனிதர்களைத் துள்ளத் துடிக்க வெட்டுவார்கள். அறுப்பார்கள். ஐயோ-குய்யோ என்ற வேதனைக் கதறலோடு கூப்பாடும், கூக்குரலும் கேட்டப்படியே இருக்கும்.

மேலே கூறியுள்ளவை அனைத்தும், 1837-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த உலக மருத்துவமனைகளது அறுவை சிகிச்சைகள் நிலைகளாகும்!

இந்தக் கொடுமையான - கோர, கொடூரக் கொலை அறுவை முறைகளைக் கண்ட மருத்துவ விஞ்ஞானி ஜோசப் லிஸ்டர், தான் கண்டுபிடித்த ஈதர் முறை என்ற சிகிச்சையை புகுத்தினார். இது ஓர் அதிசய மருத்துவ முறையாக மற்ற மருத்துவர்களுக்கும் புலப்பட்டது.

'ஈதர் முறை சிகிச்சை என்றால் என்ன என்பதை மாணவர்களே - நீங்களும் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா?

'ஈதர் என்பது ஒரு மருந்து! அதைக் கண்டுபிடித்தவர் ஜோசப் லிஸ்டர். நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கு முன்னும், அறுவை நடந்ததற்குப் பின்னும் அந்த மருந்தைக் கொடுத்து நோயாளிகளுக்கு எந்தவித வலியும் ஏற்படாமல், துன்பமும் தெரியாமல் நன்றாக மயங்க வைத்துவிடும் முறைதான் ஈதர் முறை.

இந்த ஈதர் முறை சிகிச்சையைக் கண்டுபிடித்து, மருந்து மூலம் முதன் முதலாக மருத்துவ உலகுக்குச் செய்து காட்டியவரே ஜோசப் லிஸ்டர்தான்.

ஆனாலும், இந்த மருத்துவ முறைக்குப் பிறகும் நோயாளிகள் அதிகமாக இறந்து போகும் நிலை ஏற்பட்டது. இதற்கு என்ன காரணம்? என்று லிஸ்டர் மீண்டும் ஆராய்ச்சி செய்தார்.

அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளியின் காயங்களைச் சுற்றி வீக்கம் ஏற்படுவதை லிஸ்டர் கண்டார். நோயாளிகளின் காயங்களில் உள்ள ரத்தம் விஷமாக மாறிவிடுவதால் அவன் இறந்து விடுகிறான் என்பதை அவர் ஆராய்ந்து அறிந்தார். அந்த ரத்தம் நஞ்சாக மாறுவதற்கு என்ன காரணம்?

ஜோசப் லிஸ்டர் சிந்தித்தார்! ஆராய்ச்சியில் ஈடுபட்டார் அறுவை சிகிச்சைக்குப் பிறகு காயங்களைச் சுற்றி வீக்கங்கள் உண்டாவதைக் கண்டார்!

இந்தக் காயங்களின்மேல் காற்று படாமல் இறுக்கமாகக் கட்டுக்களையும் கட்டிப் பார்த்தார் ஓரளவு வெற்றிதான் அவருக்குப் புலப்பட்டது.

அந்த நேரத்தில்தான் ஒரு பத்திரிகையில், லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானியின் ஆராய்ச்சி ஒன்று வெளி வந்தது.