பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைவரும் பின்பற்ற வேண்டிய அலெக்சாண்டரின் அனுபவங்கள்!

மாணவ - செல்வங்களே!

கிரேக்க நாட்டின் வாழ்வியல் விஞ்ஞானி சாக்ரடீஸ்! சாக்ரடீசின் வழிவந்த தத்துவ ஞானி பிளேட்டோ: பிளேட்டோவின் தத்துவ மாணவர் அரிஸ்டாடில்!

அரிஸ்டாடிலின் அரசியல் மாணவன் மாவீரன் அலெக்சாண்டர்:

இந்த நால்வரின் அறிவுப் புதையல்கள், இன்றைய மாணவர்களுக் குரிய அனுபவச் செல்வங்களாக அமையும் அல்லவா? அதனால், மாவீரன் அலெக்சாண்டர் நடந்து வந்த ஒரு பாதையை மட்டும் மாணவர்களாகிய உங்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றோம்!

அந்த வழியைப் பின்பற்ற முடியுமா என்று நீங்கள் சிந்தனை செய்யுங்கள் முடிந்தால் முயற்சி செய்யுங்கள். இல்லையானால் கவனப் பல்லக்கில் ஊர்ந்து செல்லுங்கள்! வாழ்கையின் இறுதி நாளுக்கு அவை ஊன்றுகோலாகவும் அமையும்,

மாவீரன் அலெக்சாண்டர் தனது போர்முனை வெற்றிகளை ஈட்டி, பல அரசுகளை வீழ்த்தித் தனது தாய் நாட்டுக்குத் திரும்பினான். வரும் வழியில் கடுமையான சுரநோய் அவனை வலுவிழக்கச் செய்து விட்டது. மரணப் படுக்கையில் உழன்றான்.

மாசிடோனியா நாட்டு அரண்மனை மருத்துவர்கள்; நோய் சுகமாவதற்கான மருந்துகளையும், மாத்திரைகளையும் மன்னனுக்குக் கொடுத்தார்கள். அவருடைய கடுமையான நோய் எந்த மருந்துக்கும் தணியவில்லை. சுரம் அதிகமானது. அதனால், அவர் மரணத்தின் வாயிலுக்குள்ளே நுழைந்துவிட்ட நிலை நேர்ந்தது. உயிர் பிரியும் நேரமும் நெருங்கிவிட்டது.