பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

இந்த உலகை விட்டுவிட்டு கடவுள் உலகமான மேலுலகம் செல்லப் போகின்றோம் என்ற இறுதிக் கால எண்ணங்கள் அலெக்சாண்டரை நெருக்கிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார்.

அவரது தாயாரை வரவழைத்து தனது மேலுலகப் பயணத்துக்குரிய சடங்குகளைச் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

தனது அரண்மனை அதிகாரிகளையும், தன்னுடன் போர்க் களத்திற்கு வந்து உதவி செய்த தளபதிகளையும் கண் விழித்துக் கடைசி யாக அவர் ஒருமுறைப் பார்த்தார். அவர்கள் எல்லாரும் கண்ணி ததும்ப மன்னனைச் சூழ்ந்து உடனிருந்தார்கள்.

அப்போது அலெக்சாண்டர் அவர்களை நோக்கி, "என்னுடைய பேரரசின் பாதி நாட்டை உங்களுக்குக் கொடுக்கின்றேன்; உங்களுடைய வாழ்நாளில், ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களை நான் உயிர் பிழைத் திருக்க உங்களால் ஒதுக்கிக் கொடுக்கத் தயாராக இருக்கிறீர்களா?" என்று மாமன்னன் தாழ்வான குரலில் அவர்களைக்

கேட்டார்.

அலெக்சாண்டருடன் காலமெல்லாம் வாழ்ந்திருந்த அந்த அரண்மனை அதிகாரிகளிடம் இருந்து எந்தவிதமான பதிலும் வராததைக் கண்டு அலெக்சாண்டர் வருந்தினார்.

நோய் வாய்ப்பட்டிருந்த தனது மன்னனின் வேண்டுகோளை, மூன்றில் இரண்டு பங்கு அதிகாரிகள் ஏற்க மறுத்து, அன்று தங்கள் இயலாமையை எண்ணி ஊமைகளாக அவர்கள் நின்று கொண்டிருப்பதை அலெக்சாண்டர் பார்த்தார்.

இதுதான் உலகம் என்று அவர் முணுமுணுத்தபோது, "மன்னா, இது எங்களால் எப்படிக் கொடுக்க முடியும்? ஆயுளை நீட்டித்துத் தங்களுக்குத் தரும் அதிகாரம் எங்களிடம் இல்லையே! எங்களால் எப்படி உங்களுக்கு இரண்டொரு நாட்களை உயிர் வாழ வழங்க முடியும்?" என்று மருத்துவர் களும் அவருடைய அதிகாரிகளும் கண்ணிக் கண்களோடு கூறினார்கள்.

அலெக்சாண்டர் இறப்பதற்கு முன்பு தன்முன் சூழ்ந்திருந்த அதிகாரிகளை அருகே அழைத்து, நான் இறப்பதற்கு முன்பு எனது நாட்டு மக்கள் பின்பற்றிட எனது மூன்று விருப்பங்களை உங்களிடம் கூறுகின்றேன். அவற்றை நீங்கள் மக்களுக்கு அறிவித்துப் பின்பற்றச் செய்யுங்கள் என்றார்.