பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 195

"அந்த விருப்பங்கள் என்ன?’ என்று அதிகாரிகள் மன்னரிடம் கண்ணி சிந்தக் கேட்டார்கள்.

'என்னுடைய முதல் விருப்பம், எனது உடலை அடக்கம் செய்யும் சவப் பெட்டியை என்னுடைய மருத்துவர்கள் மட்டுமே கல்லறைக்குச் சுமந்துச் செல்ல வேண்டும்; வேறு யாரும் அந்தப் பெட்டியைச் சுமந்து செல்லக் கூடாது.”

'இரண்டாவதாக, எனது சவப் பெட்டியைக் கல்லறைப் பாதைகள் வழியாகக் கல்லறைத் திடலுக்குச் சுமந்து செல்லும்போது, என்னால் சேகரிக்கப்பட்ட வைரங்கள், விலையுயர்ந்த நவரத்தின மணிக் கற்கள், தங்கக் காசுகள், வெள்ளி நாணயங்கள் ஆகியவற்றை எல்லாம் எனது சவப்பெட்டிப் போகும் பாதைகளிலே எல்லாம் வாரி வாரி இறைக்க வேண்டும். மக்களும் இதைப் பார்க்க வேண்டும்."

“என்னுடைய மூன்றாவது ஆசை இது: "எனது சவப்பெட்டி விலையுயர்ந்த பட்டுத் துணிகளால் மூடிப் போர்த்தப்பட வேண்டும். சவப்பெட்டியின் இரு பக்கங்களிலும் இரண்டு துளைகள் போட்டு, அவற்றினுள்ளே என்னுடைய இரண்டு கைகளையும் நுழைய விட்டு; முன்னும் பின்னுமாகத் தளதளவென்று அவை ஆடியாடித் தொங்கியபடியே ஊசலாடிக் கொண்டே போக வேண்டும்' என்று அலெக்சாண்டர் அதிகாரிகளிடம் தனது ஆசைகளை வெளியிட்டார்.

இதைக் கேட்ட அதிகாரிகள், ஏன் இப்படிச் செய்யச் சொல்லுகிறார் மன்னர் என்று வியப்பில் ஆழ்ந்தார்கள்.

அப்போது துணிவான ஓர் அதிகாரி அலெக்சாண்டரிடம், "வேந்தர் பிரானே, ஏன் இந்த மூன்று ஆசைகளைச் செய்யும்படி உத்தரவிடுகிறீர்கள் என்பதை எங்களுக்கு அறிவுறுத்த முடியுமா? என்று கேட்டார்."

உடனே மன்னன், "மரணத்தின் இறுக்கமான பிடியிலே இருந்து எந்த மருத்துவர்களாலும் ஒரு மனிதனைக் காப்பாற்ற முடியாது என்பதை இந்த உலகம் உணர வேண்டாமா?

அதனால் தான், அந்த மருத்துவர்களே மன்னனது சவப்பெட்டியைச் சுமந்து வருகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்".

“இரண்டாவதாக, எனது வாழ்க்கையின் மூலமாக மக்கள் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.