பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்தமானவரைப் பின் பற்றலாமே !

மாணவ - மணிகளே!

  • ஆல்பர்ட் ஐன்ஸ்டின் மிகப் பெரிய விஞ்ஞானி. அவர் முடிதிருத்திக் கொள்வதே கிடையாது.
  • அறிஞர் அண்ணா எப்போதும் இரவு பதினொன்று மணிக்கு மேல் எழுதத் துவங்கி, விடியலில் கோழி கூவும் போது முடிப்பார். காரணம் அவரது எழுதுகோல் ஓட்டத்தை எந்த இடையூறுகளும் தடுத்து நிறுத்தக் கூடாது என்பதுதான்.
  • ஹென்றி காவண்டிஷ், சிறந்த விஞ்ஞானி. ஒய்வில்லாமல் உழைத்துக் கொண்டே இருப்பார். அவர் தனக்குத்தானே கதவைத் தாளிட்டுக் கொள்வார். உணவுகூட பலகணி வழியாகத்தான் அவருக்குக் கொடுக்கப்படும்.

ဆွီ• பிரெஞ்சு எழுத்தாளர் அலெக்சாண்டர் டுமாஸ், தான் எழுதும் கட்டுரைகளைப் பிங்க் கலர் தாளிலும், கவிதைகளை 'மஞ்சள் வண்ணத் தாளிலும், நாவல்களை நீலநிறத் தாளிலும்தான் எழுதுவார்.

  • ஆங்கிலப் பெருங்கவிஞர் ஷெல்லி, தனது கவிதையை எழுதும்போது சுத்தமான வெள்ளைச் சட்டையைத்தான் அணிவார்.
  • ஆங்கில ஆசிரியரும், விமர்சனம் எழுதும் எழுத்தாளருமான டாக்டர் சாமுவேல் ஜான்சன், தான் எழுதுவதற்கு முன்னால் அவர் வீதியிலே உள்ள விளக்குக் கம்பங்கள் இருக்கும் தூரம் வரை நடந்து சென்று தொட்டுத் தொட்டுப் பார்த்துத் திரும்பி வந்த பின்பே உட்கார்ந்து எழுதுவார்.
  • இத்தாலி நாட்டு இசை அமைப்பாளர் லெளகி என்பவர், தினந்தோறும் மூன்று குவளைத் தண்ணீரைக் குடித்த பின்பே படுக்கச் செல்வார். அவர் பகலுணவை உண்ணும்போது ஒரு முழு ரொட்டியைப் பதினாறு துண்டுகளாக்கி உண்பார்.

இவை உலகப் புகழ்பெற்ற சில அறிஞர்களது பண்புகள்: மாணவர்களே உங்களுக்கு இவற்றில் ஏதாவது ஒன்றில் விருப்பம் இருந்தால் பின்பற்றலாம். இல்லையென்றால் நீங்களே ஓர் உலகம் போற்றும் பண்பை உருவாக்கலாமே!