பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 9

மின்சார வசதியோடும், ஜன்னல்களைத் திறக்கவும், மூடவுமான தோற்ற அமைப்புள்ள ஒரு புதிய கார், 1950-க்கும் 1960-ஆம் ஆண்டுக்கும் இடையே அறிமுகமானது.

இதற்கிடையே, மீண்டும் மின்சாரத்தால் இயங்கும் கார்கள் உபயோகத்திற்கு வந்தன. ஆனால், அந்தக் கார்கள் விற்பனையின்போது குறிப்பிட்ட தூரம் தான் ஒட வேண்டும் என்ற தடைக்கட்டுப்பாட்டுடன் உருவாக்கப்பட்டது.

ஹைட்ரஜன் கேஸ் மூலம் ஒட்டப்படும் புதுவகைக் கார் எஞ்சின்களும் அப்போதைய சாதனைகளால் செய்யப்பட்டன.

அமெரிக்காவைச் சேர்ந்த வழக்குரைஞர் ரால்ப் நாடெரூம் - பொருள் வாங்குவோர். பாதுகாப்புத் துறை வழக்கறிஞர் ஒருவரும் இணைந்து, "எந்த வேகத்திலும் ஆபத்து உண்டாகும்' என்ற புத்தகத்தை அவர்கள் எழுதி விபத்துக்குட்பட்டு அவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடினார்கள்.

அதன் முடிவு என்னவென்றால், சட்டத் துறைப் பாதுகாப்புக்கான மோட்டார் போக்கு வரத்து சட்டங்களைச் சட்டமன்றங்கள் இயக்கி ஒழுங்குப்படுத்தின. ஒரு தேசிய பாதுகாப்புக் கழகமும் 1968-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.

அந்த பாதுகாப்புச் சட்டக் கழகம் இப்போது வேறு பெயரோடு மாற்றப்பட்டு, நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பு. நிர்வாகமாக இயங்கி வருகின்றது.

அன்று முதல் போக்குவரத்துக்குரிய வாகனப் பாதுகாப்புகளுக்கு என்னென்ன ஆதரவு தேவையோ அவையனைத்தையும் அந்த நிர்வாகம் வழங்கி வருகிறது.

இப்போது தானியங்கி மோட்டார் வண்டிகளுக்குரிய எஞ்சின், குளுகுளு வசதி, எஞ்சினைச் சூடேற்றுதல், ஒலியளவுகள், கார்களில் எடுத்துச் செல்வதற்கான பலகை, அதற்கான செய்தித் தொடர்புகள், எல்லாவற்றுக்கும் மேலாக, ஒடும் தூரத்தைக் கணக்கிடும் இயந்திரம் போன்றவைகள் அமைந்து - எல்லா வகையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற புதிய கார் தொழில் வளர்ச்சி உருவானது.

அமெரிக்காவிலுள்ள க்ரைஸ்லர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், 1992-ஆம் ஆண்டில் காருக்குள் குழந்தைகள் உட்காருவதற்குரிய சிறப்பு இருக்கைகளை (Seats) அமைத்திருந்தது.