பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

எனவே, எண்களைக் கொண்டு கணக்கியல் முறைகளைச் செய் வதையே எண் கணிதம் எனப்படுகின்றது. எந்த மொழியாக இருந்தாலும், அதிலுள்ள 1,2,3,4 முதலிய எண்களால் கணக்குகளைச் செய்கிறோம்.

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற முறைகள் எண் கணிதத்தில் இருப்பதையும் நாம் வகுப்புகளில் கணக்கியலாகப் போடுகின்றோம்.

எழுத்தாலும்கூட கணிதம் செய்யலாம்

மாணவர்களே! எண்களால் கணிதம் செய்வதையே மேலே பார்த்தோம். எழுத்தாலும் கணிதம் செய்யலாம்! எப்படி?

ஒரு வட்டத்தின் விட்டம் அதன் ஆரத்தைப் போல இரண்டு மடங்கு என்பது கணக்கியலாருக்குப் புரிந்த உண்மை. அதை எழுத்தால் இவ்வாறு கூறலாம். D = 2R என்பதே அது.

D = என்பதை விட்டத்தின் நீளம் என்றும், R = என்பதை ஆரத்தின் நீளம் என்றும் கொண்டால், இது எல்லா வட்டங்களுக்கும் பொருந்தும்.

இதற்குத்தான் தமிழில் இயற்கணிதம் அல்லது எழுத்துக் கணிதம் என்றும், அதாவது அல்ஜீப்ரா (Algebra) என்றும் ஆங்கிலத்தில் பெயர். இயற்கணிதத்தை கணிதச் சுருக்கெழுத்து (Mathematical Short hand) என்றும் குறிப்பிடுவார்கள்.

வடிவ கணிதம் என்றால் என்ன?

ஜியோமெட்ரி என்று மாணவர்களாகிய நீங்கள் வகுப்புகளில் கூறுவீர்கள். அந்த Geometry கணக்கும் கணித வகைகளில் ஒன்றாகும். முக்கோணம், செவ்வகம், சதுரம், நாற்கரம், வட்டம் போன்ற உருவங் களின் பரப்பளவைக் கணக்கிட ஜியோமெட்ரி கணக்கு பயன்படுகிறது.

கோணங்கள், பக்கங்கள் ஆகியவற்றை அளந்து, அவற்றுக்கு இடையே உள்ள தொடர்புகளை அறியலாம். அவற்றுக்கு ஜியோமெட்ரி கணக்கு அதாவது வடிவ கணிதம் பயன்படுகிறது.

நுண்கணிதமும்

ஒரு கணித முறையே :

கொடுத்த சில எண்கள் அல்லது வேறு கணித முறைகளிலிருந்து

புதியதாக ஒரு கணித முறையை உருவாக்கப் பயன்படும் முறைக்கு