பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 20

நுண் கணிதம் என்று பெயர். அதைத்தான் நாம் ஆங்கிலத்தில் கால்குலஸ் (Calculus) என்கின்றோம்.

இந்தக் கால்குலஸ் முறையை கல் குழு மூலம் உண்டானது என்று வடாற்காடு மாவட்டத்தைச் சார்ந்த கணக்கியல் கண்டுபிடிப்பாளர் ஒருவர் கூறுகிறார். அவர் பெயர் நினைவில்லை. அது எப்படி என்கிறீர்களா?

இன்றைக்கு நாம் ஆட்டேர் என்ற மூன்று சக்கர வண்டியில் சவாரி செய்த பின்பு வண்டியில் பொருத்தப்பட்டுள்ள மீட்டரைப் பார்த்து எவ்வளவு பணம் ஆயிற்று என்று கேட்டு ஒட்டுநரிடம் கொடுத்து விடுகின்றோம். இந்த முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க நாட்டில் இருந்ததாம்.

என்ன முறை அது? விவரம் என்ன?

இப்போதுள்ள ஆட்டோ அப்போதும் அங்கே இருந்ததாம். அந்த ஊர்தி எவ்வளவு தூரம் ஓடிற்று என்பதை அறிய மீட்டரும் இருந்தது. ஒட்டுநர் அருகே ஒரு மூடப்பட்ட தகரப் பெட்டியுள், கடற்கரைகளில் காணப்படும் மழமழவென்றுள்ள சிறுசிறு கூழாங்கற்களைப் பொறுக்கி எடுத்து வந்து அந்தத் தகரப் பெட்டிக்குள் போடப்பட்டிருக்கும்.

ஆட்டோ வண்டிச் சக்கரம் ஒருச் சுற்று சுற்றும்போது, அந்தத் தகரப் பெட்டியின் மேல் பாகத்துள் போடப்பட்டிருக்கும் கற்களில் ஒன்று, அதே பெட்டியின் கீழ்பாகத்திலுள்ள வேறு ஓர் அறைப் பகுதியில் விழுந்துவிடும்.

இறுதியாகப் பயணி எங்கு இறங்குகின்றாரோ அந்த இடத்தில் தகரப் பெட்டியின் மேலே இருந்து கீழ்ப்பகுதியில் விழுந்த கற்களைக் கணக்கிடுவார்கள்.

ஏற்கெனவே வண்டிச் சக்கரத்தின் சுற்றளவைக் கணக்கிட்டுத்தான் ஆட்டோவில் பொருத்தியிருப்பார்கள். அந்தச் சக்கரங் களின் சுற்றளவுகளைக் கொண்டு ஆட்டோ ஓடிய தூரம் எவ்வளவு என்று கணக்கிட்டு மொத்தப் பணத்தையும் ஒட்டுநரிடம் கொடுப்பார்களாம்.

இதெல்லாம் இப்போது நடக்கின்ற காரியமா? இன்றைய பரபரப்பான கால நிலைக்கு ஒத்துவருமா? என்று நீங்கள் கேட்கக் கூடும். அதே முறையைத் தான் இப்போது கற்களை நீக்கிவிட்டு ஓடிய தூரத்தைத் தானாகவே கணக்கிட்டுக் காட்டும் இயந்திர மீட்டர் முறை - விஞ்ஞான வளர்ச்சிக்கேற்பப் பொருத்தப்பட்டிருக்கிறதே.