பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234. மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

'கணித மேதை இராமானுஜன் இப்படித்தான் வேலைக்கு மனு போட்டார். அவர் பட்டதாரி அல்லர் என்பதற்காக பணி மறுக்கப்பட்டது. பிறகு எப்படியோ அவர் இலண்டன் சென்று உலகுக்குக் கணித மேதையானார். -

அந்த நிலை எஸ்.எஸ். பிள்ளைக்கும் வரக்கூடாது. இவர் பட்டதாரி. பணி மறுப்பில்லாமல் வேலை கொடுக்க வேண்டும் என்று கூறவே எஸ்.எஸ்.பிள்ளை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறை பேராசிரியரானார்.

பிரான்ஸ் நாட்டில் புரூக்லின் என்று ஒரு கணிதமேதை 18-ஆம் நூற்றாண்டில் வடிவ கணித எழுத்துக்களால் சில சூத்திரங்களை எழுதி வைத்துவிட்டு, அதற்கான உண்மைப் பொருளை எழுதுவதற்குள் அவர் மறைந்து விட்டார். உலகக் கணித வல்லதுநர்கள் எவ்வளவோ முயன்றும் புரூக்லின் கணித முறைக்கு உண்மை விடைகளைக் காண முடியவில்லை.

மாநிலக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த எஸ்.எஸ். பிள்ளை, அந்த ஃபிரான்ஸ் நாட்டு மேதையின் கணித வடிவத்தைக் கண்டு, படித்து, அந்தச் சூத்திரங்களை இயற்கணிதமாகச் செய்தார். செய்தக் கணக்கியலை அது சம்பந்தப்பட்ட அமெரிக்காவிலே உள்ள பிரின்ஸ் யூனிவர்சிட்டி தகவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.

இரு நூறு ஆண்டுகளாக விடை காண முடியாமல் பல்கலைக் கழகக் கோப்புகளோடுக் கோப்பாகக் கிடந்த அந்த இயற்கணிதக் கணக்கு வகைகளை, பல்கலைக் கழகம் நன்றாக ஆராய்ந்து, எஸ்.எஸ். பிள்ளையின் கணக்குச் செய்முறைகள் சரியான விடைகளாய் இருப்பதைக் கண்டு வியந்தார்கள். -

அதைப் ஃபிரான்ஸ் அரசவைக் கணிதப் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அரசவை மன்றம் பிள்ளையின் கணக்கியலை ஏற்றுக் கொண்டது.

உடனே, ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள புரூக்லின் கணித ஆய்வியல் கூடத்திற்கு வருகை தந்து, தலைமைப் பதவியை ஏற்று அமெரிக்கச் சென்று, விஞ்ஞானி ஐன்ஸ்டினுக்கு உதவியாக பணியாற்றுமாறு பிள்ளைக்கு உத்தரவு அமெரிக்காவிலிருந்து வந்தது.

விமானச் சீட்டுக்குரிய பணம், மற்றும் வேறு வகைச் சில செலவுகளுக்குரிய வகைகளும் பயணத்திற்குத் தேவைப்படுவதை அறிந்த பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்