பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 205

சின்னசாமி பிள்ளை, எஸ்.எஸ். பிள்ளையின் பயணத்திற்குரிய எல்லா வகைப் பணத்தையும் அவர் நண்பர்களிடம் வசூலித்துக் கட்டினார்.

எஸ்.எஸ். பிள்ளை விமானம் ஏறி ஃபிரான்ஸ் நாட்டுக்குப் போகும் வழியில், விமானம் - தஞ்சை சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் லண்டன் பயணம் போகும்போது ஏற்பட்ட விமான விபத்தைப் போல - விபத் திற்குட்பட்டது.

பிள்ளையின் உடல்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. பிள்ளை குடும்பம் கதறியது. விமானத்திற்காகக் கட்டப்பட்ட நண்பர்கள் பணத்தில் ஒரு பகுதி பிள்ளைக் குடும்பத்திற்கு வந்து சேர்ந்தது.

எனவே, இராமானுஜத்தைக் கணித மேதை என்றுக் கொண்டாடும் தமிழ்நாடு; எஸ்.எஸ். பிள்ளை என்ற ஒரு கணித மேதை தமிழ்நாட்டில் இருந்தார் என்றோ, ஃபிரான்ஸ் நாட்டு மேதையின் இயற் கணிதவியலுக்குரிய விடைகளை விளக்கி உலகப் புகழ் பெற்றார் என்றோ, பெரும் விஞ்ஞான மேதை ஐன்ஸ்டினுக்கு உதவியாகப் பணியாற்றிட அழைக்கப்பட்டவர் என்றோ, அவர் போகும் வழியில் விமான விபத்தில் சிக்கி இறந்தவர் என்றோ, இதுவரை எந்தத் தமிழனாவது மக்களிடம் அவரது விவரங்களை விளக்கிக் கூறினாரா? என்றால் - இல்லையே - ஏன்?

செங்கோட்டை நகர் நுழைவு வாயிலில், ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தனது கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு மாண்ட வாஞ்சிநாதன் சிலை மட்டும் வானளாவி நிற்கின்றது.

ஆனால் விஞ்ஞான வித்தகர் ஐன்ஸ்டினுக்கு உதவியாளராகப் பணியாற்று மளவுக்கு எஸ்.எஸ். பிள்ளை திறமையுடையவர் என்று அமெரிக்கப் பல்கலைக் கழகத்தால் போற்றப்பட்டவருக்கு, அவர் பிறந்த சொந்த ஊரிலேயே ஒரு நினைவுச் சிலையை நிறுவாமல் விட்டு விட்டது தமிழ்நாடு. காரணம் இனப் பாசமற்ற நிலைதானே தமிழர்க்கு?

எனவே, வடிவ கணிதத்தில் பல உண்மைகளைக் கண்டுக் கூறியவர் செங்கோட்டை எஸ்.எஸ். பிள்ளை என்ற உண்மையை வருங்கால மாணவர் உலகமாவது இனி சிந்திக்குமா? - ஆராயுமா?

நாகர்கோயில் பொருளாதார மேதை டாக்டர் ப. நடராசன் அவர்கள் எழுதிய ஒளி விளக்குகள் எனும் நூலும், எஸ்.எஸ். பிள்ளையைப் பற்றிய கேள்விச் செல்வங்களும்தான் ஆதாரம்)