பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவ மாணவியர்களே! உலகில் நோபல் பரிசுகளைப் பெற்ற ஒரே ஒரு மேரி கியூரி குடும்பம்

மாணவ மாணவிகளே சிறுவர், சிறுமிகளே!

போலந்து நாடு தலைநகர் வார்சா அந்த நகரிலே ஓர் உழவர் குடும்பம். அந்தக் குடும்பத்தின் பெயர் ஸ்க்லொ டொஸ்கா

ஏழைக் குடும்பம் அது எளிய வாழ்க்கையில் வாழ்ந்தது: ஓயாத உழைப்பே அவர்கள் பெற்ற வறுமை! நெருப்பிலே தூங்கினாலும் தூங்கலாம்; வறுமையோடு தூங்க முடியாது என்பது வள்ளுவர் பெருமான் வாக்கல்லவா - மாணவ மணிகளே?

அந்தக் குடும்பத்தை வறுமை வாட்டினாலும், கல்வி பெறுவதில் அவர்கள் பேராசை உடையவர்களாக வாழ்ந்தார்கள்.

மேரி கியூரி தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். அவருக்கு நான்கு பெண் குழந்தைகள்; பிரோனியா மூத்தவள்; அடுத்தவள் ஜோஷியா; மூன்றாமவள் ஹெலா! நான்காமவன் ஆண் குழந்தை; பெயர் - ஜோசப் ஐந்தாம் குழந்தை மேரி கியூரி.

தமிழ்நாட்டில் ஐந்தாவது குழந்தை பெண்ணாகப் பிறந்தால் அவளை அதிர்ஷ்டக்காரி என்பார்கள். அதற்கேற்பவே மேரி கியூரியும் அதிர்ஷ்டக்காரியாகவே வாழ்ந்தாள்!

மேரி கியூரி சிறு குழந்தையாக இருக்கும்போதே அறிவுக் கூர்மை உடையவளாகத் திகழ்ந்தாள். புத்தகங்கள் படிப்பதிலும், பாடம் கேட்பதிலும, கருத்துன்றிக் கற்றதைப் பிறருக்கு எடுத்துரைப்பதிலும் வல்லவளாக விளங்கினாள்.

மாணவ மணிகளே! அந்தக் குடும்பத்தில் உடன்பிறந்த பிறப்புக்கள் எவ்வாறு கல்வி கற்றார்கள் தெரியுமா?

முதல் தமக்கை பிரோனியா, மேரிக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பாள். இரண்டாமவள் மேரிக்குக் கதைகள் கூறுவாள்; மூன்றாவது