பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் பாடங்களில் பின்தங்கிய மாணவிகளுக்குப் பாடங்கள் கற்பிப்பார்; பள்ளி ஆசிரியைகளுக்கு வேண்டும்போது உதவிகளைச் செய்வார். இவற்றுக்கெல்லாம் காரணம் மேரியின் தந்தை கூறும் அறிவுரைகளே!

பன்னிரெண்டு வயதில் உயர்நிலைப் பள்ளியை விட்டுத் தேர்வு பெற்று மேரி கியூரி வரும்போது, பள்ளியின் முதல் மாணவி என்ற புகழோடு பொற் பதக்கம் ஒன்றைப் பரிசாகப் பெற்று வெளியே வந்தார். உயர்நிலைக் கல்வியிலே இருந்து மீண்ட மேரி கியூரி, பாரீஸ் நகரத்திலே உள்ள சோர்பான் பல்கலைக் கழகத்திலே சேர்ந்து, பெளதிகம், கணிதம் பிரிவுகளில் கல்வி கற்று இரண்டு பாடங்களிலும் எம்.ஏ., பட்டம் பெற்றார். பாரீஸ் நகரிலேயே விஞ்ஞான ஆராய்ச்சிக் கல்வியையும் தொடங்கினார்.

மேரியா என்ற தனது பெயரை மேரிஎன்றி சுருக்கிக் கொண்டு, தன்னுடன் விஞ்ஞான ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய பியரி கியூரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு, கணவருடைய கியூரி என்ற இறுதிச் சொல்லை, தனது மேரி என்ற பெயருடன் சேர்த்துக்கொண்டு மேரி கியூரி என்ற உலகப் புகழைப் பெற்றவரானார்:

மேரி - கியூரி இருவரும் - மின்சாரம், காந்தம் என்ற துறைகளை ஆராய்ச்சி செய்தனர். தம்பதியர் இருவரும் எம்.எஸ்.சி. பட்டங்களைப் பெற்றார்கள்.

பிட்சு-ப்லெண்ட் என்ற தாதுப் பொருளில் யுரேனியம எனும உலோகம் இருக்கிறது என்பதை அறிந்த மேரி கியூரி தம்பதிகள், அதை ஆராய்ச்சி செய்து போலோனியம் என்ற புதிய பொருளைக் கண்டுபிடித்தார்கள்.

அதன் கழிவுப் பொருட்களை மீண்டும் ஆராய்ச்சி செய்து, புது வகை உலோகம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள் - மேரியும், கியூரியும்

அந்தப் புதுப்பொருள்தான் இன்றும் உலகம் போற்றும் யூரேனியம் என்ற பொருள். வெண்மை நிறமான அந்தப் பொருள் சுயமாக ஒளிவிட்டுப் பிரகாசித்தது. ரேடியக் கதிர் வீச்சலின் ஆற்றல் யூரேனியம் என்னும் உலோகத்தைவிடப் பல லட்சம் மடங்கு அதிகமாக இருந்தது. ரேடியக் கதிர்கள் கடினமான பொருள்களிலும் மிக எளிதாக ஊடுருவிச் சென்றன.

வெப்பத்தையும் இடைவிடாமல் ஒளி வீசும் சக்தியையும் அந்தக் கதிர்கள் பெற்றிருந்தன.