பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

"இதில் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா - மாணவர்களே?

விழித்துக் கொண்டிருக்கும்போது மனம் நினைவுகளைப் படமாக்கிப் பார்ப்பதில்லை. ஆனால், உறங்கும்போது மட்டும் மனம் தனது நினைவுகளைப் படமாக்கிப் பார்க்கின்றது.

அதாவது, நினைவுகளைப் படமாக்கும் ஆற்றல் துங்கும் மனதுக்கு மட்டுமே உண்டாகின்றது.

எனவே, மாணவ-மணிகளே! நீங்கள்கூட சில நேரங்களில் கனவுகளைப் படமாகவும், காணும் காட்சிகளைக் கண்டிருப்பீர்கள்.

அதாவது, பள்ளித் தேர்வுகளில் வெற்றி பெறுவதும், வீழ்ச்சியடைவதும்கூட, உங்களது உறக்கத்தில் படமாக, கனவாகக் காணும் மகிழ்ச்சி, அதிர்ச்சி நிலைகள் வரக்கூடும்! எல்லாமே நினைவுகளது உருவங்கள் தான் கனவு!

'துங்கும் மனம் தனது ஞாபகச் சக்திகளைப் படமாக்கிப் பார்க்கிறதே அதுதான் கனவு. படமாக்குவதும் மனம் தான்; அதைப் பார்ப்பதும் அதே மனம்தான் என்ற உண்மை நிலையைக் கண்டுபிடித்தவர்தான் சிக்மண்ட் ஃப்ராய்டு! இதுதான் கனவு!

எதனால் நாம் கனவு காண்கிறோம். ஏன் கனவு காண்கிறோம்?

எதற்காகக் கனவு காண்கிறோம்? என்பதை விளக்கினால், அவை தனி நூலாகி விடும்; விவரம் விரியும்.

மாணவர்களாகிய நீங்கள் கனவு என்றால் என்ன என்பதை மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விளக்கியுள்ளோம். பள்ளித் தேர்வுக்கோ, வேறு எதற்கேர் நீங்கள் கனவு காணும்போது முன் கூறிய வினாக்களுக்கு விவரம் புரிந்து கொள்வீர்கள் என்பதனால் சுருக்கிக் கொண்டோம்.

மாணவ - மணிகளே!

குரங்கு இனத்திலிருந்து மனிதன் தோன்றினான் என்பது டார்வின் என்ற மனித குல ஆய்வு விஞ்ஞானியின் சித்தாந்தம் இதை நீங்களும் படித்திருப்பீர்கள்!

காடுகளிலும், மலைகளிலும், பனிப் பாறைப் பகுதிகளிலும், பாலைவனங்களிலும் வாழ்ந்த ஆரம்பக் கால மனிதன் - விலங்கோடு விலங்காக, விலங்குணர்ச்சிகளே வாழ்க்கையாக வாழ்ந்திருப்பான் என்பதுதான் யூக வரலாறு.