பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் விடுகின்றமையால், Ego என்ற உணர்ச்சி மனசாட்சியையும் தாண்டிப் போராடி தன் நலன்களைக் காப்பாற்றிக் கொள்ளும் உணர்ச்சியாகின்றது. இதனால், மனிதன் வேதனைகளை அனுபவிக்கும்போது மன நோயாளியாக மாறுகின்றான்.

இந்த மனநோய்களைக் கண்டுபிடித்தவன் மட்டுமல்லன் ஃப்ராய்டு; அதற்கு மார்க்கமும் கண்டவன் என்பதால் அவனை உலகம் இன்றும் போற்றுகின்றது - மாணவ மணிகளே!

ஆண் - பெண் பாலுணர்ச்சி

ஆண்-பெண் இன காதல், மோக, காம வேட்கை, பருவம் வந்ததும்தான் உண்டாகின்றது என்பது ஃப்ராய்டு காலத்துக்கு முன்பிருந்த காலநிலை. இதை ப்ராய்டு நம்பவில்லை; ஆராய்ந்தார்.

மீன் ஆயிரக்கணக்கான முட்டைகளை இடுவானேன்? அவசியம் என்ன?

மீனின் முட்டைகளில் சில - பூச்சிகளின் ஆகாரமாகி விடுகின்றன. முட்டையிலே இருந்து வெளிவந்த சிறு மீன் குஞ்சைப் புழுக்கள் உண்டு விடுகின்றன; சிறிய, மீன்களைப் பெரிய மீன்களே இரையாகக் கொள்கின்றன. இவ்வளவு பகைகளிலிருந்து மீன் இனம் வாழ வேண்டாமா? அதனால்தான், மீன் ஆயிரக்கணக்கான முட்டைகளை இடுகின்றன.

எனவே, பிறக்கும்போதே ஆண்-பெண் என்ற உறுதியான பாலின அமைப்போடு பிறக்கும் குழந்தைகள் உள்ளத்திலும், பிறக்கும்போதே அதற்கான பால் உணர்ச்சியும், ஏதோ ஒரு மூலையில் ஒடுங்கியுள்ளது என்பது ஃப்ராய்டின் கருத்து.

குழந்தைகளிடம் இருக்கும் பாலுணர்ச்சி போகப் போக வளர்ச்சிகளால் சில பருவங்களை அடைகின்றது. குழந்தைகள் பெரியவர்களாகும்போது பருவ வயது வந்ததும் பாலுணர்ச்சி முற்றி, அடுத்த சந்ததி வளர்ச்சிகளுக்குரிய மனித விதைச் சுரப்பிகளோடு வீறிட்டு எழுகின்றது. இதுதான் ஃப்ராய்டின் ஆண்-பெண் பாலுணர்ச்சிக்குரிய விளக்கங்கள். மாணவ - மணிகளே! சிறுவர், சிறுமிகளே!

சிக்மண்ட் ஃப்ராய்டு, மேற்கண்டவாறு கனவுகள், மனோ தத்துவ உள்ளுணர்வுகள், மன இயக்கங்களது தன்மைகள், மனநோய்கள், மனம்