பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவீந்தர நாத் தாகூரின் தேசிய கீதம் சுருங்குமா?

மாணவ - மணிகளே!

நீங்கள் தினந்தோறும் உங்களுடைய பள்ளித் துவக்க நேரத்தின்போது, நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும். என்ற தமிழ்த் தாய் வாழ்த்தைப் பாடி முடித்த பின்பு வகுப்புக்குள் நுழைந்து அன்றையப் பாடங்களைப் படிக்கின்றீர்கள்!

மாலைப் பொழுதாகி வகுப்புகள் முடிந்ததும் பள்ளி மாணவர்களாகிய நீங்கள் தேசிய கீதம் என்ற நாட்டுப் பற்றுப் பாடலைப் பாரதத் தாய் மீது பாடி முடித்துப் பள்ளியை விட்டுக் கலைந்து வீடு திரும்புகிறீர்கள்.

அந்தப் பாடலின் பெயர் தேசிய கீதம். அதை எழுதியவர் உலகம் போற்றும் நோபல் பரிசைப் பெற்ற கவி மன்னர் இரவீந்திரநாத் தாகூர். இவர் இந்தியாவின் விடுதலைக்காகங் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்; தியாகி; காந்தியடிகளின் நண்பர். அவர் குருதேவ் என்றும்கூட மக்களால் போற்றப்பட்டவர். சாந்திநிகேதன் என்ற கல்விக் கோட்டம் கண்ட வித்தகராவார்.

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதம் பாடல்தான் 'ஜனகனமன அதிநாயக ஜெயகே என்ற பாடல். இந்தியத் தலைநகரமான டில்லி செங்கோட்டையில், காலையிலும், மாலையிலும் நமது தேசியக் கொடியை ஏற்றும்போதும், இறக்கும்போதும் இந்தத் தேசிய கீதத்தைப் பாடி முடிக்கின்றோம்.

இந்தத் தேசிய கீதம் பாடல் நாம் வெள்ளையனிடமிருந்து விடுதலைப் பெற்றப் பின்பு எழுதப்பட்ட நாட்டுப் பற்றுப் பாடலன்று. இந்தியா விடுதலைப் பெறுவதற்கு முன்பே, 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் நான்று கல்கத்தா நகரில் நடைபெற்ற இந்தியத் தேசியக் காங்கிரஸ் பேரவை மாநாட்டில் பாடுவதற்காக, கவிஞர் தாகூரால் எழுதப்பட்ட பாடலாகும்.