பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளியில் பயணம் செய்த முதல் பெண் வாலண்டினா !

மாணவ - மணிகளே!

உலக மக்கள் உதடுகள் எல்லாம் 16.5.1963-ஆம் ஆண்டன்று வாலண்டினா, வாலண்டினா என்றே உச்சரித்துக் கொண்டிருந்தன. எதற்காகத் தெரியுமா?

வாலண்டினா நிக்கோலாயி வாடெரஷ்கோவா என்ற ருஷ்யப் பெண், 'வாஸ்டோக்-6 என்ற விண்கலத்தை முதன் முதலாக விண்வெளியில் தனது ஆய்வரங்க விஞ்ஞானி ஒருவருடன் செலுத்தினாள்.

அந்த விண்வெளி வீராங்கனை வாலண்டினா எந்தவித ஆபத்தும் நிகழாதவாறு மண்ணுக்குத் திரும்பி வரவேண்டும் என்று உலக மக்கள் மனமுருகியபடியே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது நல்லெண்ணம் போலவே வாலண்டினா கலம் நிலமிறங்கியது. மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்த்தி அவர்களை வரவேற்றனர்!

அதே சோவியத் நாட்டிலிருந்து, யூரி ககாரியன் என்ற விஞ்ஞானி முதன் முதலாக ரஷ்யாவிலிருந்து விண்கலம் செலுத்தினார். அதற்கொப்பவே, சில ருஷ்யா விஞ்ஞான ஆய்வாளர்களின் பயிற்சி உதவிகளோடு வாலண்டியனாவும் விண்வெளி ஆய்வுப் பயணம் சென்றார்.

விண்வெளி ஆய்வுப் பயணம் சென்று வருவதென்பது அவ்வளவு சுலபமான செயலல்ல. எவ்வளவோ ஆபத்துக்களை எதிர்பாராமல் அடிக்கடிச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.

அதனால்தான் வாலண்டினா நல்ல நிலையோடு மீண்டும் பூமிக்குத் திரும்பி வரவேண்டும் என்று ரஷ்ய விஞ்ஞானிகளும் மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நல்லெண்ணம்