பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

சீகன் பால்க் தனது உலகச் சுற்றுப் பயணத்தையும், நூலை இலத்தீன் மொழியில் வெளியிட்டத்தைப் பற்றியும் பாராட்டி, அவருக்கு அங்கே ஒரு பாராட்டு விழா நடைபெற்றது.

அந்த விழாவிற்கு ஆங்கில மொழி, இலத்தீன் மொழி, கிரேக்க மொழி, ஜெர்மன் மொழி, சேக்சன் மொழி, பிரெஞ்சு மொழியைச் சேர்ந்த அறிஞர்கள் அனைவரும் வருகை தந்து சீகன் பால்க் மொழித் தொண்டுகளைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.

அந்த விழாவில் நன்றி உரை ஆற்றிய சீகன் பால்க், தனக்குத் தெரிந்த வேறு எந்த மொழியிலும் பேசித் தனது நன்றியைத் தெரிவிக்காமல், தமிழ் மொழியிலேயே உரையாற்றினார். பேசும்போது இடையே சிறிது நேரம் நிறுத்தி, நான் பேசும் மொழி உங்களுக்குப் புரியவில்லையா? என்று அவர் அவையை நோக்கிக் கேட்டார். அறிஞர்கள் திருதிருவென விழித்து மெளனமாகவே காட்சி தந்தார்கள்.

சீகன் பால்க் அவர்களுக்குப் பதில் கூறியபோது, தெய்வமொழி எவருக்கும் புரியாது. குழந்தைகளுக்கு மட்டும்தான் புரியும். நான் பேசிய மொழி தமிழ். அது தெய்வ மொழி என்று குறிப்பிட்டார்.

அவை திணறியது; இலத்தீன் மொழியிலே அவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கணத்தை அனைவரும் விரும்பிக் கற்றிட முடிவெடுத் தார்கள். இது சீகன் பால்க் தமிழுக்குச் செய்த அரிய தொண்டு தானே!

மாணவ மணிகளே! நீங்களும் "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்ற உணர்ச்சிப் பெற்றுத் தாய்த் தமிழுக்குத் தொண்டாற்றுவீர்களா?

German News