பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானியல் விஞ்ஞானி கல்பனா சாவ்லா!

கல்பனா சாவ்லா

மாணவ - மணிகளே!

கல்வியில் பல வகை உண்டு. அவற்றுள் ஒன்று வான்வெளிப் பயணத்தில் ஆராய்ச்சி செய்யும் பிரிவு:

அந்த வானியல் ஆய்வுத் துறையில் படித்தவர் கல்பனா சாவ்லா (Kalpana Chawla) 6TsoTp 6îlešESHTET udmsvarsil.

இந்த என்ற மாணவி இந்திய மாநிலங்களில் ஒன்றான ஹரியான மாநிலத்தில் பிறந்தவர்.

அவர் 19.11.1997-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொலம்பியா வில் நடைபெற்ற 88-வது வானியல் வெளிப் பயண அரங்கின் கல்வித் துறை ஆய்வில் கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் கென்னடி விஞ்ஞான ஆய்வுக் கூடத்திலிருந்து விண்கலத்தின் ஆய்வுப் பணிக்காக அனுப்பப்பட்ட விஞ்ஞான வீராங்கனை கல்பனா சாவ்லா - வான்வெளியில் பறந்து சென்றார். காரணம், கல்பனா வான்வெளிப் பயணக் கலம் ஆய்வில் மிகத் திறமை உடையவர் என்பதால், சாவ்லாவுக்கு உதவியாக வேறு ஒருவரையும் உடன் சேர்த்து அந்த விஞ்ஞானக் கூடம் அனுப்பி வைத்தது.

தனது ஆய்வை முடித்துக் கொண்டு கல்பனா பூமிக்கு திரும்பி வரும்போது, அந்த விஞ்ஞான சோதனைக் கலம் பழுதுபட்டுவிட்டது. அப்போது ஏற்பட்ட எதிர்பாராத திடீர் விபத்தில் விமானம் எரிந்து வீழ்ந்தது. வீராங்கனை கல்பனா சாவ்லாவும் மாண்டார்.

விண்வெளிப் பயண வீராங்கனை விஞ்ஞானி கல்பனா சாவ்லா இந்தியாவுக்கு நற்புகழைத் தேடித் தந்த பெண் விஞ்ஞானி மேடம் க்யூரிக்குப் பிறகு, கல்பனா இந்திய விஞ்ஞான ஆய்வுத் துறையில் தீவிரமானச் சிந்தனையாளராக உழைத்தார். சென்ற செயலில் வெற்றிக் கொடி நாட்டப்படும் நேரத்தில் விபத்துக்குப் பலியான மாணவி அவர்! வாழ்க அவரது அறிவியல் தொண்டு !