பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

RÉ இபாஸ்கட் பால்

வீட்டுக்கருகே பெண்கள் ஆடும் கூடைப் பந்து விளையாட்டு:

மாணவிகளே! - பெண்களே! * :

உேடைப் பந்தாட்டம் என்ற வீர விளையாட்டை இங்கிலீஷில் ‘பாஸ்கட் பால் (Basket Bai) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஆட்டத்தை வட அமெரிக்காவில் கன்னடா நாட்டில் அல்மோண்டே மாநிலத்திலிருக்கும் ஆண்டாரியோ என்ற நகரத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் நய்ஸ்மித் என்ற கன்னடா நாட்டைச் சேர்ந்தவர் முதன் முதலாகக் கண்டுபிடித்தார்.

ஒரு பந்தை இரண்டு அணியினரும் தரையில் தட்டித் தட்டிக் கொண்டு வந்து; கம்பம் ஒன்றின் உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் வலை கூடையில் விழ வைப்பார்கள். அதில் எந்த அணி அதிக எண்ணிக்கை எடுக்கின்றதோ அந்த அணி வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.

அமெரிக்காவில் உள்ள மாசா சூ செட்ஸ் என்ற மாநிலத்திலிருக்கும் ஸ்பிரிங் ஃபீல்டு என்ற நகரின் பள்ளி ஒன்றில் நய்ஸ்மித் என்பவர் விளையாட்டுத் துறை ஆசிரியராகப் பணியாற்றினார்.

குளிர் காலத்தில் தங்களுடைய வீட்டுக்கருகே ஏதாவது ஒரு விளையாட்டு விளையாட வேண்டுமென்று மாணவர்கள் விரும்பினார்கள். அதைத் தங்கள் ஆசிரியரிடம் கூறவே அவரும் மற்ற விளையாட்டுப் போட்டியில் ஆடும் ஆட்டங்களிலிருந்து சில சட்ட திட்டங்களை உருவாக்கினார்.

அதற்கேற்ப அவர், வீட்டுக்குள்ளேயே மாணவர்களை விளையாட வைக்கும் ஒரு விளையாட்டைக் கண்டுபிடித்தார்.

அந்த ஆட்டத்தை 1892-ஆம் ஆண்டில் முதன் முதலாக அவருடைய மாணவர்கள் விளையாடினார்கள். அந்த விளையாட்டுதான் ‘பாஸ்கட் பால் என்ற விளையாட்டு.

ஒரு கால் பந்து - ஆடவும், இரண்டு பழக் கூடைகள் களமாகவும் வலைக் கூடையாகவும் மாணவர்கள் பயன்படுத்தி ஆடினார்கள். அந்தக் கூடைப்பந்து ஆட்டம் கடந்த 100 ஆண்டுகளாக உலகத்தில் நடைபெற்று வருகின்றது.

மாணவிகளே! பாஸ்கட் பால் கண்டுபிடித்த வரலாறு இது. நீங்களும் வீட்டிலேயே விளையாடலாமே!