பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய வீரக் கலைகளில் ஒன்றுதான் கராத்தே வித்தைகள்!

மாணவ - மாணவிகளே!

‘கரத்தே என்றால் அது ஒரு வெறுங்கை என்று ஜப்பான் மொழியில் பொருள், கராத்தே, என்பது ஆயுதம் எதுவும் ஏந்தாத போர் முறை வித்தைகளாகும்.

ஒருவன் எந்தவிதப் போர் ஆயுதக் கருவிகளையும் கையில் எடுக்காமலேயே, எதிரிகளைக் காலாலும், கையாலும் அடி உதைகளைக் கொடுத்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு தற்காப்புக் கலைதான் கராத்தே கலை.

இதற்குரிய காரணம் என்ன தெரியுமா? அவரவரது உடல் திடகாத்திர பலமும், திறனும் சேர்ந்து, எந்தெந்த இடத்தில் குறிப்போடு மோத வேண்டும் என்ற சம்பவங்களின் சார்பு நிலைகளுமே காரணங்களாகும்.

இந்தியாவில் இருந்த போதிதர்மா என்ற ஒரு புத்த மத ஞானி கி.பி.500-வது ஆண்டுக் கால கட்டத்தில் சீன நாட்டுக்குத் தனது பெளத்த மத தத்துவங்களைப் போதிக்கப் பயணம் செய்தார்.

யாத்திரை சென்ற போது, தான்-கற்றுவைத்திருந்த யோகக் கலை, மூச்சுக்கலை, உடலோம்பும் உணவுக்கலை, அவற்றுக்கான அனுபவங்கள், திறமைகள் அனைத்தையும் அவர் அங்கிருந்த மக்களிடையே விளக்கிக் கூறி - புத்த மதக் கொள்கைகளைப் பரப்பிக்கொண்டே பயணம் செய்தார்.

இறுதியாக, சீன நாட்டின் ஹோமன் மாநிலத்திலே உள்ள ஷோலின் பெளத்த ஆலயத்திலே தங்கி, பிக்குகளை, பிக்குணிகளைச்