பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 235

சேர்த்து வாழ்க்கைக் கலையை வளமாக்கும் ஒரு சங்கத்தை அங்கே துவக்கி - அவர் நடத்தி வந்தார்.

அவரது சங்கத்துக்கு தினந்தோறும் வருகை தரும் பெளத்தத் துறவிகளுள் பெரும்பாலார், உடல் ரீதியான பலவீனர்களாக இருப்பதைக் கண்டு அவர் பரிதாபப்பட்டார்

மனத்தாலும், உடல் பலவீனத்தாலும் சீன நாட்டிலே வாழ்கின்ற புத்தத் துறவிகளுக்கு, மனவளமும், உடல் பலமும் ஊட்டும் வளர்ச்சிகளுக்கான வழிவகைகளை அறிவிக்கும் பெளத்த நூல் ஒன்றை அந்த போதிதர்மா எழுதினார்.

அந்தப் புத்தகம், பெளத்த மதக் கொள்கைகளை மட்டுமே போதிப்பதாக இல்லாமல், யோகக்கலைகளை வளர்க்கும் - ஆசன வகைகளைக் கூறும் - ஆசானாகவும் திகழ்ந்தது.

சுருக்கமாகக் கூறுவதானால், அந்த நூலுக்கு 'The Doctrine of Relaxing Tension உடல், மன இறுக்க நிலைக்கான மனத்தளர்வு நெறிகள் என்று பெயரிடப்பட்டது.

ஆயுதங்கள் இல்லாமலேயே எதிரிகளிடம் போரிடும் கலையைப் பற்றிய விளக்கச் சுவடியாக அந்த நூல் விளங்கியது.

போதிதர்மா என்ற புத்தஞானி, ஷோலின் புத்தராலயத்துக்கு வரும் பெளத்தர்களுக்கு அந்த நூலின் தத்துவங்களைப் போதித்து, கராத்தே, குங்ஃபூ, கெம்போ போன்ற பலவகையான கலைக்குரிய தத்துவ ஞானங்களை விளக்கிப் பயிற்சி தந்து, சீன மக்களது மன, உடல் வள - நல வளர்ச்சிகளுக்கு ஊக்கமூட்டினார்.

இந்தக் கலைகள் இப்போது சீனா முழுவதும் பரவியதோடு நில்லாமல், கொரியா, ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன் - இந்தியா போன்ற நாடுகளுக்கெல்லாம் பரவி, மக்கள் வாழ்க்கைக்குரிய பாதுகாப்புக் கலையாகவும் அது நடமாடுகின்றது.

கராத்தே கலையின் வீரப் போராற்றல் ஏறக்குறைய இரண்டு நிமிடங்கள், அல்லது அதற்கும் குறைவான நேரத்திலேயே முடிந்துவிடும். இந்த விளையாட்டுக்கு யாரையும் அழைக்கும் வழக்கமும் கிடையாது, அவ்வாறு வந்தால் அனுமதிப்பதும் இல்லை.

இந்தக் கலையைக் கற்பவரே, பிறரை வெல்லும் ஆற்றலைப் பெற்றவராக இருப்பார். அவர்களது எதிரிகளின் பாதுகாவலை இரண்டு முறைகளாவது ஊடுருவிப் பலம் புரிந்தவர்களாக இருப்பார்கள்.