பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும்போதே வருவது டிஸ்லெக்சியா நோயா?

ஆல்வாய் எடிசன்

மாணவர்களுக்கு எச்சரிக்கை

மாணவ மணிகளே! நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது வரி வரியாக விரலை வைத்துத்தான் தடவித்தடவி வாசிக்க முடிகின்றதா?

எழுதும்போது எழுதுகோலை ஒரேயடியாகச் சாய்த்துத்தான் நீங்கள் எழுதுகின்றீர்களா? அல்லது, எழுதுகோலை நெட்டுக் குத்தாக நட்டு நிமிர்த்திப் பிடித்துக் கொண்டு எழுதுகின்றீர்களா?

புத்தகத்தைப் பார்த்து எழுதும்போது தப்பும் - தவறுமாகக் கண்ட படி எழுதுகின்றீர்களா? எழுத்துக்களைத் தலைகீழாகவும் எழுதுகின்றீர்களா? இவ்வாறான அடையாளங்கள் உங்களுக்கு இருந்தால் - என்ன காரணம் இதற்கு? என்று எச்சரிக்கையோடு யோசனை செய்யுங்கள்? உடனே, அப்பா, அம்மாவிடம் இந்த விவரத்தை அச்சமின்றி விளக்கிச் சொல்லுங்கள்.

மேற்கூறப்பட்ட அறிகுறிகளுள் ஏதாவது ஒன்று மாணவர்களிடம் இருந்தால், அந்த மாணவனுக்கு 'டிஸ்லெக்சியா என்ற ஒரு குறைபாடு இருப்பதாகப் பொருள்.

'டிஸ்லெக்சியா ஏன் வருகிறது? மூளையில் இரண்டு பிரிவுகள் உண்டு. அந்தப் பிரிவுகளுள்; இடது - வலது பக்கங்களின் இடைவெளியில், சரியானத் தொடர்பு இல்லாவிட்டால், இந்த 'டிஸ்லெக்சியா என்ற குறைபாடு நோய் வருவது உறுதி.

பெரும் பகுதி இந்தக் குறைபாடுகள் மாணவ - மாணவிகளுக்கும் சிறுவர்களுக்கும் - சிறுமிகளுக்கும் - ஏன், குழந்தைகளுக்கும்கூட வரும்: