பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 239

அன்று அவர் ஆயுர்வேத மருத்துவத் துறைக்குச் செய்த சேவை, இன்று இந்திய மக்களுக்குரிய அரிய மருத்துவ முறையாகப் பலன் வழங்கி வருவதை நாம் அனுபவிக்கின்றோம்.

-- பஞ்சாப் மாநிலத்தின் வளமூட்டும் .zo பேறாறாகச் சிந்து நதி விளங்கி வருகின்றது بقلم _ ' அந்த நதிக்கு இந்துஸ் (INDUs) என்ற பெயர் கடந்த 5000 ஆண்டுக் காலமாக இருந்து வருகின்றது. இந்த நதி கடற்பயணத்துக்கும் ஏற்றதாக அமைந்து வணிக முறைக்கும் வசதியாக விளங்கியது.

இங்கிலீஷ் மொழியில் NAviGATION என்று வழங்கப்பட்டு வரும் சொல்லை, சமஸ்கிருத மொழியில் 'NAVAGATH என்று கூறப்படுவ தாகவும், NAWY என்ற அந்த ஆங்கிலச் சொல், NOU நெளவ் என்ற சமஸ்கிருதச் சொல்லென்றும் வடமொழி ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

இவை எந்த அளவுக்கு உண்மை என்பதை வருங்கால இந்தியத் தலைமுறைகளான மாணவ-மாணவியர்களாகிய நீங்கள்தான் ஆராய்ந்து கூற வேண்டும் அது உங்களது உரிமை மட்டுமன்று-கடமையும் கூட!

கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானியான பாஸ்கராசார்யா என்பவர். பூமி, சூரிய கோள் சுற்றுப்பாதைக் காலத்தை ஆய்வு செய்து ஓர் ஆண்டு என்பது 365.258756484 நாட்கள் என்று கணித்துள்ளார். -

அல்ஜீர (ALGEBRA எனப்படும் குறிகணக்கியல், TRIGONOMETRY என்று அழைக்கப்படும் முக்கோணத்தின் கோணச் சிறை வீகிதங்களைக் கணித்தாயும் கணக்கியல்துறை, கால்குலஸ் CALCULUS என்றும், நுண்கணிதவியல் முறை போன்ற கணிதவியல் துறைகள் எல்லாமே - இந்தியக் கணித விஞ்ஞானக் கண்டுபிடிப்புதான் என்று இந்தியக் கணித வரலாறு குறிப்பிடுகின்றது.

உருக் கணக்கியல் துறையின் இருவிசைப்படிச் சமன்பாடு எனப்படும் QUADRATIC, சமநிலை எனப்படும் EQUATIONS போன்ற கணிதவியலை 11-வது நூற்றாண்டில் வாழ்ந்த ரீதராசாரியார் கண்டுபிடித்தவை என்று இந்திய கணித அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

குஜராத்திலும் மேற்கிந்தியாவிலும் வேளாண் பெருமக்களால் விவசாயத்திற்குரிய DAMS அணைக்கட்டுகளும், இயற்கையான