பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

அல்லது செயற்கையான RESERVOR நீர்த்தேக்கங்களையும், நீர்ப்பாசன வசதிகளுக்கான IRRIGATIONகளையும் உருவாக்கப்பட்டன என்பதை வரலாறு அறிவிக்கின்றது.

செஸ் (CHESS) எனப்படும் சதுரங்க ஆட்டமும், இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அஷ்ட பாதா என்ற ஆட்டமாகும்.

அறுவை சிகிச்சையின் தந்தை என்று 2600 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மக்களால் பாராட்டப்பட்டவர் சுஷ்ருதா (SUSHRUTA என்ற மருத்துவமேதை.

இவர் ஓர் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பதால், மற்ற அறுவை மருத்துவர்களால் கைவிடப்பட்ட மூளை அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரியின் நோயாளிகளைக் குணப்படுத்தும் ஆற்றலுடைய வராக் அவர் திகழ்ந்தார்.

இத்தகைய நோயாளர்களை நலமாக்கிட ANESTHETC எனப்படும் உணர்ச்சியை மயங்கவைக்கின்ற இந்திய வைத்திய முறைகளால், அந்த நோயாளிகளை அறிவியல் முறைப்படி சுகப்படுத்தும் மருத்துவ விஞ்ஞானிகள் வாழ்ந்த நாடு இது.

இவ்வாறு, இந்திய விஞ்ஞானம், கல்வித் துறை மேம்பாடு, உலகம் போற்றும் வகையில் வாழ்ந்த நாடு நமது பரதகண்டம் என்பதற்குரிய சான்றுகள் ஏராளமாக உள்ளன என்பதை - இன்றைய சிறுவர், சிறுமியர் உலகமும், உணர்ந்து; தங்களையும் வாழ்க்கை உயர்வையும் மேம்படுத்திக் கொண்டு; பாரத நாட்டின் பண்டையப் பெருமைகளை ஆராய்ந்து உண்மைகளை உணர்ந்து காக்க வேண்டியது வருங்கால இளையத் தலைமுறையினரான மாணவருலகக் கடமை அல்லவா?