பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

அனுப்பிவைக்க, குறியீடுகளை எழுதுவதற்காக பயன்படுத்தப்பட கண்டுபிடிக்கப்பட்ட பேனா வகையாகும். அவசரக் காலத்திற்கு குறி யீடுகளை எழுதுவதற்காகவே இந்தப் பேனா உபயோகப் படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்த மில்டன் ரெயினால்ட்ஸ் என்பவர், இந்த பேனா எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதைச் சிந்திக்க ஆரம்பித்து, அதற்குரிய புதிய முறை ஒன்றை 1943-ஆம் ஆண்டில் அவர் கண்டுபிடித்தார்.

போர்க் காலங்களில் முரட்டுக் கோணிச் சணல் துணிகள் மேல் எழுதியதை அகற்றிட, ஒரு புதுமாதிரி உருவமாக அதைச் செய்திட கற்பனைச் செய்தார்.

ஒரு மில்லி மீட்டர் அளவில் சிறிய குழாய் போன்ற குச்சி மாதிரியான வடிவத்தில் மை ஒழுகும் இயல்புடைய, கெட்டிமையற்ற, எளிதில் மாறுபடுகிற, நிலையுறுதியற்ற, அரை நீர்மங்களின் வழி ஆற்றலால் மை இயங்கச் செய்கின்ற புதிய உருவம் ஒன்றை; மில்டன் ரெயினால்ட்ஸ் கண்டுபிடித்தார்.

இந்தக் கண்டுபிடிப்பை அமெரிக்க அரசு பாராட்டியதோடு நில்லாமல், தனது இராணுவப் போர் வீரர்களுக்கு அதை வழங்கிப் பயன்படுத்துமாறு கட்டளையிட்டது. இந்தப் பேனாவுக்கு ரெயினால்ட்ஸ் பால் பாயிண்ட் பேனா என்ற பெயரை அந்த அரசு சூட்டியது.

இதே நேரத்தில் தென் அமெரிக்காவில் அர்ஜெண்டைனா என்ற பகுதியில் வாழ்ந்த ஹங்கேரி நாட்டு அகதி ஒருவர், அச்சு இயந்திர மறுதோன்றி நகல் எடுக்கும் பணி செய்பவரான லேஸ்லோபைரோ (Laszlo Biro) என்பவர், தனது சொந்த பயன்பாட்டிற்காக கண்டுபிடித்த பால் பாயிண்ட் பேனாவின் மற்றோர் வடிவத்தை உற்பத்திச் செய்திட பண முதலீட்டாளர் ஒருவரைத் தேடிக் கண்டுபிடித்தார்.

ஏறக்குறைய ரெய்னால்ட்ஸ் பேனாவைப் போலவும், நெஞ்சுப் பைக்குள் ரத்தத்தைக் குத்திக் கொண்டு செல்லும் குறுகிய குழாய் போன்ற வடிவத்தில் மை கொண்டு செல்லும் பேனா வடிவமைப்பை அந்த பைரோ கண்டுபிடித்திருந்தார்.

அந்த பால்பாயிண்ட் பேனாவை ஹென்றி மாராட்டின் என்ற ஆங்கிலேயர் தயாரித்து, இரண்டாவது உலகப் போர் நடைபெற்றபோது அரசு இராணுவத் துறை உபயோகத்திற்குப் பயன்பட விட்டார்.