பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் விஞ்ஞானி, பத்மபூஷன் டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன்!

டாக்டர்.கே. எஸ். கிருஷ்ணன்

மாணவ - மணிகளே:

டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் புகழ்பெற்ற ஒரு தமிழ் விஞ்ஞானி. அவருடைய முழு பெயர் டாக்டர் கரியமாணிக்கம் சீனிவாசன் கிருஷ்ணன். இவர், 4.12.1898-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலுள்ள வத்திராயிருப்பு என்ற ஊரில் பிறந்தார்.

டாக்டர் கிருஷ்ணன் தனது எம்.ஏ. பட்டத்தையும், D.Sc என்ற அறிவியல் துறை கல்வியையும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெற்றவர்.

தற்போது பங்களாதேஷ் என்ற நாட்டிலுள்ள டாக்கா பல்கலைக் கழகத்தில் 1928-ஆம் ஆண்டு முதல் 1933-வரை ரீடராகப் பணியாற்றினார். கல்கத்தா பல்கலைக் கழகத்தில் 1933-ஆம் ஆண்டு முதல் 1942 வரை மகேந்திரலால் அரசு ஆய்வுத்துறை பேராசிரியராக வும், 1942-ஆம் ஆண்டு முதல் 47 - வரை இயல்பியல் துறை ஆய்வாள ராகவும், அந்தத் துறையின் தலைமைப் பேராசிரியராகவும் கிருஷ்ணன் பணிபுரிந்தார்.

இந்தியத் தேசிய இயல்பியல் ஆய்வுத் துறைக் கூடத்தின் இயக்குநராக 1947-ஆம் ஆண்டு முதல் 1961 - வரை பணியாற்றினார். 1947 - முதல் 61 - வரை அணு இயக்க வலிமை ஆய்வுத் துறைக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.

இந்திய விஞ்ஞானப் பேரவைக்குத் தலைவராகவும், அணு ஆய்வு சக்திக்குத் தலைவராகவும், உலக நாடுகளின் நிலவுலகக் கோள் சார்பான இயற்பியல் துறை சார்ந்த இந்தியத் தேசியக் குழுத் தலைவராகவும், இலண்டன் நகரிலுள்ள ராயல் சொசைட்டி உறுப்பினராகவும் கிருஷ்ணன் திகழ்ந்தவர்.