பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 - மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

விலங்குகளைக் கூர்ந்து ஆய்ந்தார். அந்த மலைமீதுள்ள தாவர வகைகள் வளர்ச்சிகளைக் குறிப்பெடுத்தார்.

தென் அமெரிக்கக் காடுகளிலே இறங்கி, அங்கே வாழுகின்ற மக்களையும், அவர்களது அன்றாடப் பழக்க வழக்கத் தொழில்களையும் தனது நாட்குறிப்புக் கையேடுகளில் டார்வின் விவரமாக எழுதிக் கொண்டார்.

மிருகங்களுக்கும், பறவைகளுக்கும், பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டுத் தோற்ற வகைகளை அந்த கலாபாகோஸ் தீவுத் திட்டுக்களிலே காணப்படுவதைக் கருத்துன்றிக் கடினமாகச் சிந்தித்தார்.

எல்லா வகையான தாவர, விலங்கு உயிரினத் தோற்றங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் படிப்படியாக, சிறிது சிறிதாக, அதனதன் இயற்கை அமைப்புகளோடு வளர்ச்சிப் பெற்று வந்துள்ளன என்ற முடிவுக்கு அவர் வந்தார். அவற்றுள் சிலவகை உயிரினங்கள் மட்டும் காலத்தை வென்று தொடர்ந்து நீடித்திருக்கின்றன என்பதையும் கண்டுபிடித்தார். -

டார்வினுடைய மக்கள் மரபு வழித் தத்துவம், அதன் கொள்கைகள் இயற்கையின் படைப்பு வழிக்கேற்றபடி இன்றும் கூட கல்வியாளர்களின் எதிர்ப்புக்கும், போட்டிக்கும் உரியதாக அமைந்துள்ளது.

சார்லஸ் டார்வின் என்ற அந்த உயிரியல் கண்டுபிடிப்பு மாமேதை 1882, ஏப்ரல் 19-ல் மறைந்தார். என்றாலும், அவரது கண்டுபிடிப்பு இன்றும் ஆய்வுக்குரியதாகவே இருக்கின்றது.

அத்தகைய அற்புத உயிரின வளர்ச்சி விஞ்ஞானியின் கண்டு பிடிப்பைப் பாராட்டி, நமது இந்திய அரசு அவருக்குச் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா எடுத்துள்ளது,

மாணவ - மணிகளே!அவருடைய கல்வி வீணாகவா போய் விட்டது? அது போல, உங்களுடைய கல்வியும் உழைப்பும் வீணாகாது. தொடர்பான, ஆழமான முயற்சி செய்தால் எந்தத் துறையில் நீங்கள் இறங்கிப் பணியாற்றுகின்றீர்களோ, அந்தத் துறையில் உறுதியாக வெற்றி பெறுவீர்கள் என்பது உறுதி!