பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் வில்லியம் அடீஸ் என்பவர் தான் (WLAM ADDis) பற்களைச்

சுத்தப்படுத்தும் பிரஷை முதன் முதலாகக் கண்டுபிடித்தார். இவர்

இலண்டன் மாநகரிலே வாழும் தோல் தொழிலாளியின் மகனாவார்.

அக்கம் பக்கத்தாருடன் அவர் வம்படி வழக்கில் ஈடுபட்டு லண்டன் காவல்துறைக்குப் பயந்து, அங்கங்கே சில இடங்களில் ஒளிவு-மறைவு வாழ்க்கையை நடத்தி வந்தார்.

எப்படியாவது அவர் பொழுதைப் போக்க வேண்டுமே என்ற எண்ணத்தில், அங்கங்கே கிடைத்த எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்து, அவற்றைக் குச்சிகளைப்போல ஒழுங்காகச் சீவி, செதுக்கிக் கொண்டு காலம் தள்ளினார்.

ஒரு நாள் அந்தச் செதுக்கிய எலும்புகளாலேயே தனது பற்களைச் சுத்தப்படுத்திப் பார்த்தார். அது கரடு முரடாக இருந்ததால் பற்களில் ரத்தம் வழிந்து, வலியை உருவாக்கிவிட்டது.

அதற்குப் பிறகு, பசு மாடு வாலின் நுனியிலே உள்ள நீண்ட மயிர்களைக் கத்தரித்து, எலும்பு போன்ற அந்தக் குச்சியிலே சிறு சிறு துளைகளையிட்டு - மயிர்களை வரிசையாக, ஏற்றத் தாழ்வு இன்றி நுழைத்தார். அந்த மயிர்களை அந்தச் சிறு துளைகளிலே புகுத்தி ஒட்டினார்.

இப்போது அந்த எலும்புக் குச்சியால் தனது பற்களைத் தேய்த்துச் சுத்தப்படுத்தினார். இதுதான் உலகத்தில் முதன் முதலாக உருவான டூத் பிரஷ் ஆகும்.

இதற்குப் பிறகு உலக நாடுகளில் பல வகையான டூத் பிரஷ்களும், இப்போது நாக்கு வழிக்கும் டங்கர் போன்ற பற் கருவிகளும் வெளிவந்து மக்கள் இடையே செல்வாக்குப் பெற்று விற்பனையாகின்றன. எல்லாம் விஞ்ஞான வளர்ச்சிகளின் சாதனைகள் தானே!