பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 253

சிறப்பான ஆட்டப் போட்டிகளையும், ஆடுநர்களையும் அந்தக் குழு தேர்வு செய்ததுடன், ஒவ்வொரு வகையாக ஆட்டம் ஆடுவதற்கான சட்ட திட்ட விதிகளையும் உருவாக்கியது. அதனால் சிறப்பான ஆட்ட வீரர்கள் அந்தந்த நாடுகளிலே படிப்படியாக வளர்ந்து உருவானார்கள்.

1896-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை-இந்தப் போட்டி ஆட்டக் களங்கள் அங்கே நடைபெற்றன.

முதன் முதலாக ஏதென்ஸ், கிரீஸ் நாடுகளில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கடைசி ஒலிம்பிக் ஆட்டப் போட்டிகள் போலவே அவை நடைபெற்றன.

அந்த ஆட்டங்களில் 13 நாடுகள் கலந்து கொண்டன. 311 வகை விளையாட்டு வீரர்கள் அதில் பங்கேற்று ஆடினார்கள். ஒன்பது உலகப் போட்டிகள் மட்டுமே அப்போது நடந்தன.

முதல் உலகப் போரும், இரண்டாவது உலகப் போரும் நடைபெற்ற 1916, 1940-ஆம் ஆண்டுகளில் உலக ஒலிம்பிக் வீர விளையாட்டு ஸ்போர்ட்சுகள் (Sports) நடைபெறமால் நிறுத்தப்பட்டு விட்டன. காரணம், போர்களின் எழுச்சியும் - வீழ்ச்சியும் தான்.

கடைசி ஒலிம்பிக் வீர விளையாட்டு உலகப் போட்டி 1996-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் அட்லாண்டா நாட்டில் மீண்டும் நடைபெற்றது.

இந்த உலகப் போட்டியில் 197 நாடுகள் கலந்து கொண்டன. 26 வகையான ஆட்டப் போட்டிகள் நடந்தன. ஏறக்குறைய 10,000 வீர விளையாட்டுத் தீரர்கள் அவரவர் வலிமைகளோடு கலந்து கொண்ட காட்சிகள் உலகத்துக்கே ஒரு திருப்பு முனையாக அமைந்தன.

ஒலிம்பிக் ஆட்டங்கள் வண்ண வண்ண விழா தோற்றங்களோடு துவக்கப்பட்டு, ஆடுகளம் செல்லும் வீரர்கள் தக்கப் பரிசுகளைப் பெறுவதற்காக அணிவகுத்துச் செல்லும் காட்சிகள், வீரத்தைக் கண்டு அனுபவிக்கத் திரண்டு வந்திருந்த வீரச் சுவைஞர்களுக்கு விருந்தாக அமைந்தன.

ஒலிம்பிக் ஆட்டங்கள் சார்பாக வீரத் தீப்பந்தம் கிரீஸ் நாட்டு ஒலிம்பியா நகரிலே இருந்து வீரர்களால் ஓட்டப் பந்தயமாகக் கொண்டு வரப்பட்டது.

இந்தத் தீப்பந்தம் ஆட்டப் போட்டிகள் முடியும் வரை ஏதென்ஸ் ஆடுகளத்தில் அது எரிந்து கொண்டே இருக்கும்.