பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 255

ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நகரங்களிலும், ஜப்பான் நாட்டிலும் ஒலிம்பிக் பந்தயங்கள் மற்ற நாடுகளை விட அதிகமாக நடைபெற்றன. கோடைக் காலத்திலும் இந்த ஆட்டப் போட்டிகள் முக்கியமாக நடைபெற்றன.

ஒலிம்பிக் ஆட்டப் போட்டிகளில் நீரில் நீய்ச்சலடிக்கும் ஆட்டங்கள், குத்துச் சண்டைப் போட்டிகள், சைக்கிள் விடும் போட்டிப் பந்தயங்கள், கூடைப் பந்து ஆட்டப் போட்டிகள், பளுதுக்கும் போட்டிகள், துப்பாக்கிச் சுடும் போட்டிகள், மலைகள் மேல் பனிக்கட்டிகள் மீது சறுக்கி விளையாடும் போட்டிகள் போன்றவைகளும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் சேர்க்கப்பட்டு நாடுகள்தோறும் அவை நடைபெற்றன.

ஜப்பான் நாட்டிலுள்ள நாகோனா என்ற இடத்தில் 1998-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் வீர விளையாட்டுக்களை அந்த நாடு டெலிவிஷனிலும் பார்த்து ரசித்துப் பரவசப்பட்டது.

27-வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள, சிட்னி நகரத்தில் 2000-ஆம் ஆண்டில் செப்டம்பர் முதல் தேதியில் நடைபெற்றது.

1898-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ஒலிம்பிக் ஆட்டப் போட்டிகளில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பங்கேற்று ஆடி வந்தது என்பது குறிப்பிடத் தக்கச் சம்பவமாகும்.

குறிப்பு: உலக ஒலிம்பிக் வீர விளையாட்டுப் போட்டியில் நார்மன் பிரிட்சர்டு (NORMAN PRITCHARD) என்பவர்தான் முதன் முதல் 1900-ஆம் ஆண்டில் வெள்ளிப் பதக்கம் பரிசு பெற்றார்.

மாணவ - மணிகளே உலக நாடுகளில் முதன் முதலாக ஒலிம்பிக் வீர விளையாட்டுப் போட்டிகள் இவ்வாறுதான் தோன்றின, வளர்ந்தன.

அதே வீர விளையாடல்கள்தான் இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக் காலத்திற்கு ஏற்றவாறு சில புதுமைகள் இணைக்கப்பட்டு அந்தந்த நாடுகள் நடத்தி வருகின்றன. நீங்களும் அந்தப் போட்டி ஆடல் பாடில்களை டி.வி.க்களில் கண்டு களித்துச் சுவைத்து ரசித்து வருகிறீர்கள்.