பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 259

கிழக்கு இந்தியப் பகுதியின் வங்கக் கடல் கடற்கரை நிலப் பகுதியில் 'ஒரிசா என்ற மாநிலம் இருக்கிறது. இங்கே பண்டைய நாட் களில் ஒட்ராஸ் ODRAs என்ற புகழ் பெற்ற பழங்குடி மக்கள் ஆட்சி செய்தார்கள். அதனால், இந்த மாநிலத்துக்கு ஒரிசா என்று பெயர் வந்தது.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் மேஹாலயா என்ற மாநிலம் உள்ளது. இந்த இடத்தை மேகங்கள் கூடும் இடம் என்பர் அறிவாளர் அதனால், இந் நிலப்பகுதிக்கு மேகாலயா என்று பெயரிட்டார்கள் L{y83836m!,

இந்தியாவின் வடமேற்குப் பாகத்தில் ஹரியானா என்ற ஒரு மாநிலம் இருக்கின்றது. HAR ஹரி என்றால் பசுமை, பச்சை என்பது பொருளானதால் ஹரியானாவுக்கு அப்பெயர் ஏற்பட்டது.

தென்னிந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தின் அழகு நகர்களில் ஒன்று பெங்களுர். இதன் தோற்ற அழகைப் பார்ப்போர் இது ஒரு தேவதை நகரம் என்பார்கள். Bangalore என்ற வார்த்தையிலே இருந்து வந்ததுதான் பெண்டகாலு BANDAKALU என்ற சொல். இதற்கு, வேகவைக்கப்பட்ட பீன்ஸ் என்றும் கூறுவர்.

ஆங்கிலேயர் ஆட்சியாளர்களால் வடமேற்கு மாநிலம் என்று அழைக்கப்பட்ட பூமி தான் இப்போது உத்தரப் பிரதேசம் என்று குறிப்பிடப்படுகிறது. 1871-ஆம் ஆண்டின் போது, அந்த மாநிலத்தின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டன. அதற்குப் பிறகு தான் சுருக்கமாக அந்த மாநிலத்தை U.P. உ.பி. என்றும் அவர்கள் அழைத்தார்கள். இந்தியா விடுதலை பெற்றதற்குப் பிறகு-1947-ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசம் என்றே அதற்குப் புதுப் பெயரிடப்பட்டது.

நாம் வாழும் இந்தியாவைப் பரத கண்டம் என்றும், பாரதம் என்றும் இன்று அழைத்து மகிழ்கின்றோம். இதற்குக் காரணம், துஷ்யனும் - சகுந்தலை என்ற இருவரும் சேர்ந்து பெற்ற பிள்ளை தான் பரதன் எனப்படுபவன். அதனால், அவன் பெயரால் நமது நாட்டை பரத கண்டம் என்று நமது முன்னோர் பெயர் சூட்டினார்கள்.

இப்போது ஈரான் நாடு என்று அழைக்கப்பட்டு வரும் அன்றைய 'பெர்ஷியர்கள் சிந்து தேசம் என்ற பகுதிக்கு வந்தார்கள். அந்த சிந்து நதியைப் பிறகு இந்துஸ் நதி என்று குறிப்பிட்டார்கள்.

இதற்குப் பின்பு வருகை தந்த கிரேக்கர்கள், இந்துஸ் நதிப் பகுதியை இந்தியா என்ற பெயரையிட்டு அழைத்தார்கள். அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போகும் வழியில் குறுக்கிட்ட அந்த ஆறை, நதியை, சிந்து ஆறு' என்றே மீண்டும் அழைத்தார்கள்.