பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 263

அளவு-மாறாத- நிலையான-அளவுடையது' என்ற கருத்துக் களைத் துணிகரமாக வெளியிட்டார் வில்லியம் ஹார்வி.

"நுரையீரல் ரத்த ஓட்டம்-அதாவது சிறிய ரத்த ஓட்டம்” என்றார் ஹார்வி.

"உடலமைப்பு முழுவதும் சார்ந்த ரத்த ஓட்டம் - பெரிய ரத்த ஓட்டம்" என்றார் ஹார்வி.

மனித உடலில் இரண்டு விதமான ரத்த ஓட்டங்கள் உள்ளன என்ற விவரத்தைக் கண்டுபிடித்து உலகுக்கு முதல் முதலாகக் கூறிய - மேதை ஹார்வி.

மேற்கண்ட "இரண்டு இரத்த ஓட்டங்களும் தனித் தனியானவையோ, இணையான ரத்த ஓட்டங்களோ அல்ல - தொடர் ரத்த ஓட்டங்களே” என்பதையும் உலகுக்கு முதன் முதல் உணர்த்தி நிரூபித்தவரும் வில்லியம் ஹார்விதான்.

மாணவ-மணிகளே! நமது உடலில் ரத்த ஓட்டம் எப்போதும் நிற்காமல் ஓடுகின்றதே. என்ன காரணம்? என்று கேட்கத் தோன்றுகின்றதா-உங்களுக்கு?

அதற்கு ஹார்வி, என்ன கூறினார் தெரியுமா? "இதயத்தை ஒரு பம்பிங் ஸ்டேஷ்ன் என்றார். "இதயத்தின் விசை இயக்க சக்தியே என்றும் குறிப்பிட்டார்.

இரத்த ஓட்டம் பற்றி இன்றைய விஞ்ஞானமும் நம்பும் அளவுக்கு சில உண்மைகளை அவர் ஆராய்ந்து கூறியதால், மருந்தியல் விஞ்ஞானம் ஹார்வியை இதயத் துறையின் தந்தை என்று இன்றும் போற்றுகின்றது.

இதை நிரூபிக்க மனித ரத்த ஓட்டம் என்ற நூல்களை எழுதி, அதனுள்ளே இரத்த ஓட்டம் எவ்வாறு மனித உடலில் ஒடுகின்றது என்பதையும், நுரையீரல், இதயம் ரத்த ஓட்டத்தில் வகிக்கும் பயன்பாடுகளையும் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்வியின் இந்தக் கருத்துக்களை மற்ற மருத்துவர்கள் நம்ப மறுத்தார்கள் கேலியும் கிண்டலும் செய்து அவரைக் கிறுக்கன் என்றார்கள் ஓட ஓட அவரை விரட்டினார்கள் அவரிடம் சிகிச்சைப் பெற வந்த நோயாளிகளையும் ஓட ஓடத் துரத்தி விரட்டி அடித்தார்கள்.

ஆனாலும், ஹார்வி அஞ்சவில்லை. கருமமே கண்ணாக இருந்து, 'இதயத்திலே இருந்து உருவாகும் ரத்த ஓட்டம் உடலெல்லாம்