பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

பாய்ந்தோடி, மீண்டும் அந்த ரத்தம் உருவான இடத்திற்கே திரும்ப வந்து சேரும் என்று அவர் கூறிய கருத்தை அறிவுடைய மருத்துவ நிபுணர்கள் சிலர் ஒப்புக் கொண்டார்கள்.

அதே கருத்தைத் தான் இன்றைய மருத்துவ உலகமும் போற்றுகின்றது.

இத்தாலியில் உள்ள இத்தாலிப் பல்கலைக் கழகத்திலும், பாதுவா கல்லூரியிலும் ஹார்வி மருத்துவப் பட்டங்களைப் பெற்றபோது, அப்போது புகழ் பெற்றிருந்த விஞ்ஞான நிபுணர் கலீலியோவிடமும், பெப்ரீசியஸ் என்ற மற்றொரு மேதையிடமும், ஆய்வுக் கூடப் பயிற்சிகளையும் பெற்ற வித்தகரானார் ஹார்வி.

மருத்துவத் துறை டாக்டராக அவர் பிறந்த போஸ்டோன் நகரிலே பணிபுரிந்த போது, ஹார்வி கண்டு பிடிப்புக்களுக்கெல்லாம் தேடி வந்தது புகழ்.

செயிண்ட் பஸ்தலோமி யூஸ் என்ற மருத்துவமனைக்கு ஹார்வி மருத்துவராக மாற்றப்பட்டவுடன் இராயல் கல்லூரிக்கு மருத்துவ ஆலோசகரானார்

அப்போது, இங்கிலாந்து நாட்டு மன்னர்களான முதலாம் சார்லஸ், முதலாம் ஜேம்ஸ் என்பவர்கள், ஹார்வியைத் தேடி வந்து அவரது திறமைகளைப் பாராட்டி மன்னரால் நியமிக்கப்படும் அரசு பதவிகளை வழங்கினார்கள்.

ஹார்வியிடமே மருத்துவச் சிகிச்சை பெறும் வாடிக்கை யாளரானார்கள்-மன்னர்கள். இந்த நேரத்தில் ஹார்விக்குச் செல்வாக்கும் சொல்வாக்கும் எல்லை மீறி ஏற்பட்டதால் அவருக்கு எதிரிகள் பொறாமையாளர்கள் உருவானார்கள்.

நமக்குத் தெரியாத கருத்தைக் கண்டு பிடித்துக் கூற-ஹார்வி யார்? என்ற அறிவுப் பொறாமை, தீயாகப் பற்றிப் பரவியதால், ஹார்வி நூற்களை எல்லாம் புரட்சிக்காரர்கள் தீயிட்டு எரித்தார்கள்!

அவருடைய மருத்துவ ஆய்வுக் கூடத்தை உடைத்து நாசமாக்கினார்கள். எதிர்கால மருத்துவத் துறைக்காக அவர் எழுதி வைத்தக் குறிப்புகளை எல்லாம் சூறையாடி நெருப்பிட்டார்கள்.

இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லஸ் என்பவர் மட்டுமே ஹாாவியிடம் மனிதனாக நடந்து கொண்டார். மன்னர் ஆதரவால் அவர் வேறு சில நாடுகளுக்கும் சென்று மீண்டார்.